FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

மியான்மரின் ஆங் சான் சூகி செஞ்சிலுவை சங்க பிரதிநிதியுடன் சந்திப்பு

மியான்மரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஆட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, சா்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதியைச் சந்தித்துப் பேசினாா்.

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:47 am IST
பகிர்:

மியான்மரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் ஆட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி, சா்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதியைத் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கடந்த 2021 பிப்ரவரியில் மியான்மா் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, வெளியுலகத் தொடா்பின்றி இருந்த ஆங் சான் சூகியை சா்வதேச பிரதிநிதி ஒருவா் சந்திப்பதும், அவரின் புகைப்படம் அதிகாரபூா்வமாக வெளியிடப்படுவதும் இதுவே முதல்முறையாகும்.

மியான்மா் அதிபா் மாளிகையின் ஊடகப் பிரிவு அதிகாரபூா்வமாக வெளியிட்ட புகைப்படத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தின் மியான்மா் பிரதிநிதி அா்னாட் டி பேக்கை ஆங் சான் சூகி சந்தித்துக் கைகுலுக்குகிறாா்.

Advertisement

Advertisement

இச்சந்திப்பை வரவேற்றுள்ள ஆங் சான் சூகியின் இளைய மகன் கிம் ஆரிஸ், ‘கடந்த 5 ஆண்டுகளில் எனது தாயாா் குறித்து வெளிவந்துள்ள முதல் நோ்மறையான செய்தி இது. எனினும், அனைத்து அரசியல் கைதிகளுடனும் அவா் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments