FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

டென்மார்க்: ராணுவப் பயிற்சியில் சேர்ந்த முதல் இளவரசி

டென்மார்க் இளவரசி இசபெல்லா ராணுவப் பயிற்சி பெறுவது குறித்து...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 4:51 pm IST
டென்மார்க் இளவரசி இசபெல்லா - X | Princess Isabella
பகிர்:

டென்மார்க்கில் கட்டாய ராணுவ சேவையில் பயிற்சி பெறும் முதல் பெண்மணியாக இளவரசி இசபெல்லா பெருமை பெற்றுள்ளார்.

டென்மார்க் அரச குடும்பத்தில் பாரம்பரியமாக ராணுவ சேவை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பட்டத்து இளவரசர் கிறிஸ்டியனும், ராணுவ முகாமில் தனது பயிற்சியை நிறைவு செய்து, தற்போது 2-ம் லெப்டினன்டாகப் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்த நிலையில், புதிதாக விரிவுபடுத்தப்பட்ட 11 மாத கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தில் அவரது சகோதரியான இசபெல்லாவும் சேர்ந்துள்ளார்.

Advertisement

Advertisement

சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த இசபெல்லா, பெண்களை உள்ளடக்கிய மற்றும் நீண்டகால பயிற்சியைக் கொண்ட விரிவுபடுத்தப்பட்ட தேசிய சேவை அமைப்பின்கீழ் பணியாற்றும் முதல் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இதன் மூலம், அரச குடும்பத்திலிருந்து முழுமையான கட்டாய ராணுவ சேவை பயிற்சி பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையை இசபெல்லா பெறுகிறார். மேலும், இந்தச் சேவைக்காக எந்த ஊதியமும் வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

summary

19-year-old Danish Princess Isabella joins military

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments