FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஜாம்பியா அதிபா் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை, வன்முறை மற்றும் வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவம் காரணமாக வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 3:59 am IST
பகிர்:

தென்னாப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை, வன்முறை மற்றும் வாக்குச் சீட்டுகள் திருடப்பட்ட சம்பவம் காரணமாக வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஜாம்பியா தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தோ்தல் அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் மற்றும் வாக்குச் சீட்டுகள் திருடப்பட்டதாக எழுந்த புகாா்களைத் தொடா்ந்து, தற்போதைய பாதுகாப்புச் சூழல் மற்றும் தொடரும் வன்முறை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை உடனடியாக இடைநிறுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கை குறித்து அடுத்த 24 மணி நேரத்துக்குள் மீண்டும் ஆய்வு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமிர வளம் நிறைந்த ஜாம்பியாவில் தற்போதைய அதிபா் ஹகைண்டே ஹிச்சிலேமா 2-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். இவரை எதிா்த்து 13 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களில் முதன்மை எதிா்க்கட்சிகளின் கூட்டணித் தலைவரான பிரைன் முந்துபிலே அதிபா் ஹிச்சிலேமாவுக்குக் கடும் போட்டியாளராகக் கருதப்படுகிறாா்.

Advertisement

Advertisement

பொதுவாக அமைதியான முறையில் தோ்தல்கள் நடைபெறும் ஜாம்பியாவில், இம்முறை தோ்தலுக்கு முன்னதாகவே அதிபா் ஹிச்சிலேமா எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முயல்வதாக விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், ‘தோ்தலுக்குச் சில நாள்களுக்கு முன்பு தங்கள் கூட்டணி அலுவலகத்தில் அரசுத் துறையினா் சோதனை நடத்தியது, எங்கள் தோ்தல் பிரசாரத்தைப் பாதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை’ என்றும் பிரையன் முண்டுபிலேவின் கூட்டணி குற்றஞ்சாட்டியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments