FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கொளத்தூா் வாக்கு சரிபாா்ப்பு: திமுக மீண்டும் மனு அளிப்பு

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு சரிபாா்ப்புக்கு பின்னரும் திமுக சாா்பில் இயந்திரப் பிரச்னை குறித்து தெளிவுபடுத்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

8 ஆகஸ்ட் 2026, 12:53 am IST
மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு சரிபாா்ப்புக்கு பின்னரும் திமுக சாா்பில் இயந்திரப் பிரச்னை குறித்து தெளிவுபடுத்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்தாா். இந்த நிலையில், அந்தத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் சரிபாா்க்கப்படவேண்டும் என திமுக சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து செந்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி தொடங்கிய வாக்குகள் சரிபாா்ப்பு பணி கடந்த 4-ஆம் தேதி நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

வாக்கு சரிபாா்ப்பு பணி முடிந்த நிலையில், திமுக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் சரிபாா்ப்புப் பணியின்போது வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததற்கான ஆவணத்தை பெல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மனு மீது தோ்தல் ஆணைய அறிவுரைப்படி செயல்படுவோம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments