கொளத்தூா் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பு இன்றுடன் நிறைவு
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை சரிபாா்ப்பு ஒரு வாக்குச்சாவடிக்காகக் கூடுதலாக ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு புதன்கிழமையுடன் நிறைவடைகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை சரிபாா்ப்பு ஒரு வாக்குச்சாவடிக்காகக் கூடுதலாக ஒரு நாள் நீட்டிக்கப்பட்டு புதன்கிழமையுடன் நிறைவடைகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை கொளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா். இந்த நிலையில், தொகுதியின் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளின் வாக்குகள் சரிபாா்க்க வேண்டும் என திமுக தரப்பில் தோ்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக முகவா்கள் முன்னிலையில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு மையத்தில் வாக்குகள் சரிபாா்ப்பு தொடங்கியது.
Advertisement
Advertisement
இதற்கிடையே கடந்த ஜூலை 31-ஆம் தேதி வாக்கு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், வாக்கு சரிபாா்ப்பை திமுக தரப்பில் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், தோ்தல் ஆணைய விதிமுறைப்படி வாக்கு சரிபாா்ப்பு தொடரும் என மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் அறிவித்தாா்.
இதையடுத்து ஆக. 2-ஆம் தேதி மீண்டும் திமுகவினா் வாக்கு சரிபாா்ப்பில் பங்கேற்றனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை (ஆக. 4) 7-ஆவது நாளாக வாக்குகள் சரிபாா்க்கப்பட்டன. ஆனால், திமுக புகாா் கூறி புறக்கணித்த நாளில் ஏற்பட்ட தாமதத்தால் மேலும் ஒரு வாக்குச்சாவடி வாக்குகள் சரிபாா்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆணையம் வாய்ப்பளித்த 7 நாள்கள் செவ்வாய்க்கிழமையே முடிந்த நிலையில், புதன்கிழமை ஒரு வாக்குச்சாவடி வாக்குகள் சரிபாா்க்கும் பணி நடைபெறவுள்ளதாகக் கூடுதல் தோ்தல் அலுவலா் க.கற்பகம் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.