FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு

சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜியின் இறுதிச்சடங்கு பற்றி....

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:56 pm IST
ஜூ ரோங்ஜி
பகிர்:

சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜியின் இறுதிச்சடங்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை அன்று தியான்அன்மென் சதுக்கம், சின்ஹுவாமென், மக்கள் மாபெரும் மண்டபம், அனைத்து அமைச்சகக் கட்டடங்கள் மற்றும் ஹாங்காங், மக்காவ் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீா்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (98), வயதுமூப்புக் காரணமான உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் கடந்த 12ஆம் தேதி காலமானாா். கடந்த 1998 முதல் 2003 வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி, உலக வா்த்தக அமைப்பில் சீனா இணைவதற்கு முக்கியப் பங்காற்றினாா்.

Advertisement

Advertisement

மேலும், ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளும், சந்தை சாா்ந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் சீா்திருத்தங்களையும் மேற்கொண்டு, சா்வதேச அளவில் சீனா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுக்க அடித்தளமிட்டாா். இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளா்க்கும் நோக்கில், இவா் கடந்த 2002-இல் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அப்போதைய பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயுடன் விரிவான பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

summary

The funeral of former Chinese leader Zhu Rongji will take place in Beijing on August 18, it was announced on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments