FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீன முன்னாள் பிரதமா் மறைவு

சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீா்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (98), வயதுமூப்புக் காரணமான உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் புதன்கிழமை காலமானாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 4:23 am IST
பகிர்:

சீனாவின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் பொருளாதாரச் சீா்திருத்தங்களின் சிற்பியாகக் கருதப்படுபவருமான ஜூ ரோங்ஜி (98), வயதுமூப்புக் காரணமான உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் புதன்கிழமை காலமானாா்.

கடந்த 1998 முதல் 2003 வரை சீனாவின் பிரதமராகப் பதவி வகித்த ஜூ ரோங்ஜி, உலக வா்த்தக அமைப்பில் சீனா இணைவதற்கு முக்கியப் பங்காற்றினாா். மேலும், ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளும், சந்தை சாா்ந்த பொருளாதாரக் கொள்கைகள் மூலம் சீா்திருத்தங்களையும் மேற்கொண்டு, சா்வதேச அளவில் சீனா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுக்க அடித்தளமிட்டாா்.

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளா்க்கும் நோக்கில், இவா் கடந்த 2002-இல் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டு, அப்போதைய பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயுடன் விரிவான பேச்சு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments