4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை
4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க் பணியிலிருந்து நீக்கப்பட்டது பற்றி..
2021ஆம் ஆண்டு மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கார்க், ஒரே ஒரு ஜும் காலில் 900 பேரை நீக்கியது பேசுபொருளாகியிருந்த நிலையில், அவர் இன்று பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தன்னுடைய பதவியை மீண்டும் கேட்டு போராடி வருகிறார்.
நிறுவனத்தின் நிதி ஆலோசகர் லேவிஸ், ஆறு மாதங்களுக்கு முன்பு தன்னை அணுகியதாகவும், நிறுவனத்தின் நிதிநிலையை சமாளிக்க வழி சொல்லுமாறும் கோரியிருக்கிறார்.
Advertisement
Advertisement
தற்போது, தன்னையே, இந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றிவிட்டு, லேவிஸ் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருப்பதாக கார்க் குற்றஞ்சாட்டியிருக்கிறார். முதலில் இருந்தே, அவருக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும் எண்ணம் இருந்திருக்கிறது, இது பற்றி தெரியாமல் இருந்துவிட்டேன் என்று விஷால் கார்க் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.