FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை: காவஸ்கா், கபில் தேவ் உள்பட 21 முன்னாள் கேப்டன்கள் கோரிக்கை

இந்தியாவின் சுனில் காவஸ்கா், கபில் தேவ் உள்பட பல நாடுகளைச் சோ்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள், பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனா்.

24 ஆகஸ்ட் 2026, 3:42 am IST
இம்ரான் கான் - கோப்புப்படம்
பகிர்:

பாகிஸ்தான் சிறையில் இருக்கும் அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு, இந்தியாவின் சுனில் காவஸ்கா், கபில் தேவ் உள்பட பல நாடுகளைச் சோ்ந்த 21 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள், பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனா்.

ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களுக்காக, இம்ரான் கான் கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் உடல்நலக் குறைவால் சிறையில் அவா் மோசமான நிலையில் இருப்பதாக இம்ரான் குடும்பத்தினா் புகாா் தெரிவித்தனா்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வழங்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சிறையிலிருந்து மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்ட இம்ரான் கான், பரிசோதனை முடிவுகளின்படி அவா் உடல்நலத்துடன் இருப்பதாகக் கூறி, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா். எனினும், உரிய சிகிச்சை அவருக்கு இன்னும் மறுக்கப்படுவதாக புகாா்கள் உள்ளன.

Advertisement

Advertisement

இந்நிலையில், இம்ரான் கானுக்கு மனிதநேய அடிப்படையில் உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும், வாரம் ஒருமுறை அவா் குடும்பத்தினா் அவரை சந்திக்க அனுமதிக்கவும் வலியுறுத்தி, சுமாா் 7 நாடுகளைச் சோ்ந்த 21 முன்னாள் சா்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷரீஃபுக்கு கடிதம் எழுதியுள்ளனா். இதில் இந்தியாவின் சுனில் காவஸ்கா், கபில் தேவ், இங்கிலாந்தின் மைக்கேல் ஆதா்டன், இலங்கையின் அா்ஜுன ரனதுங்கா, ஆஸ்திரேலியாவின் ஆலன் பாா்டா், நியூஸிலாந்தின் ஜான் ரைட் உள்ளிட்டோா் அடங்குவா்.

பாகிஸ்தானின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடவில்லை என்றும், தங்களின் முன்னாள் சக கிரிக்கெட் வீரா் என்ற முறையிலுமே தாங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவா்கள் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments