இம்ரான் கானுக்கு உயர்தர சிகிச்சை... கபில்தேவ், கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் கேப்டன்கள் கடிதம்!
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நலனுக்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் வெளியிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகத் தேர்வானார்.
இதனையடுத்து 2018-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில், அவரது கூட்டணிக் கட்சிகள் திடீரென ஆதரவை விலக்கி கொண்டதால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து ஊழல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராவல்பிண்டி நகரின் அடியாலா சிறையில் அவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார்.
Advertisement
Advertisement
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் 73 வயதான இம்ரான் கான், தற்போது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகவும், இதற்கிடையில் அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் பாகிஸ்தான் அரசு வழங்க மறுக்கின்றது என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, இம்ரான் கானை சந்திக்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும், அவருக்கு சிறையில் முறையான மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான வசதிகள் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்பட்டது. இதில், சிறையிலுள்ள கடினமான சூழல்களாலும், போதிய மருத்துவ வசதிகள் வழங்கபடாததாலும் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்ட இம்ரான் கான் சிறிது நேரத்திலேயே ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், சிறையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வரும் இம்ரான் கானுக்கு மனிதாபிமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்தியாவின் சுனில் கவாஸ்கர் , கபில் தேவ் மற்றும் திலீப் வெங்கசர்க்கர் உள்பட 8 நாடுகளைச் சேர்ந்த 21 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் கேப்டன்கள், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவர்களின் கடிதத்தில், “நாங்கள் அரசியல் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. கிரிக்கெட் பயணத்தின் அடிப்படையிலேயே இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறோம். நாங்கள் கோரிக்கை வைப்பதெல்லாம், உச்ச நீதிமன்றத்தின் தலைமையின்கீழ் உள்ள மருத்துவக் குழுவினரால், இம்ரானின் கண்ணில் ஏற்பட்டுள்ள பார்வை இழப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் மற்றும் இம்ரானின் உறவினர்கள் அவரைச் சந்திப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இம்ரான் கானுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி கபில் தேவ், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட இந்திய கேப்டன்கள் உள்பட 14 சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் கூட்டாகக் கடிதம் எழுதியிருந்தது நினைவுகூரத்தக்கது.
MUMBAI: As many as 21 former international captains from nine cricketing nations, including India’s Sunil Gavaskar, Kapil Dev and Dilip Vengsarkar, have written to Pakistan's Prime Minister Shehbaz Sharif, renewing their appeal for the medical treatment and welfare of Pakistan’s former Prime Minister and 1992 World Cup-winning captain Imran Khan, following developments this week that they say fall short of a directive of the Supreme Court of the country.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.