FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இதுதான் தண்ணீர் போரா? நேபாள பெரு வெள்ளமும் சீனத்தின் மீது எழும் குற்றச்சாட்டுகளும்

இதுதான் தண்ணீர் போரா என்று நேபாள பெரு வெள்ள பேரிடரில் சீனத்தின் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

நேபாள பெரு வெள்ளம் - AP
பகிர்:

நேபாளத்தில் ஆக. 26-ஆம் தேதி பெருவெள்ளம் நேரிட்ட நிலையில், மீண்டும் 30அம் தேதி போடேகோஷி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த 4 நாள்களுக்கு முன் நேரிட்ட பேரிடரைக் காட்டிலும் நேற்று அதிக வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

நேபாளத்தில், ஆக. 26ஆம் தேதி திடீரென நேரிட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 900-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கிறார்கள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கும் நிலையில், இந்த பேரிடரில், சீனத்தின் பங்கு ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை, பனிப்பாறை சரிந்து பெரு வெள்ளம் ஏற்பட்டதைக் காட்டிலும், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வெள்ளம் ஏற்பட்டபோது அதிகளவில் தண்ணீர் பாய்ந்தோடி வந்ததால் அது சீனத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்திருக்கிறது.

Advertisement

Advertisement

அதாவது இதுதான் தண்ணீர் போரா? சீனா, அருகில் உள்ள நாடுகளின் மீது தண்ணீர் போரைத் தொடங்கியிருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.

திபெத் - நேபாள எல்லையில் பனிப்பாறை சரிந்ததே இந்த பேரிடருக்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், பனிப்பாறை சரிந்ததன் காரணம் என்னவென்று விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், அப்பகுதியில் நடக்கும் சீனக் கட்டுமானப் பணிகள் குறித்த ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

நேபாள எல்லையில், பனிச்சரிவு ஏற்பட்டு தடைபட்டிருந்த திபெத்திய ஆற்றின் நீரோட்டம் உடைபட்டு திடீரென அதிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறியதே நேபாள பெரு வெள்ளத்துக்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள நீரியல் மற்றும் நீர் வள ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப அறிக்கையை மேற்கோள்காட்டி 'காத்மாண்டு போஸ்ட்' வெளியிட்ட மற்றொரு செய்தியிலும், திபெத் பகுதியிலிருந்து நேபாளத்தின் போடேகோஷி ஆற்றுக்குள் வெள்ள நீர் பாய்ந்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மாயமான வெளிநாட்டினா் 590 போ் உள்பட 4,000-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை. காணாமல் போனவர்களை மீட்கும் பணி திங்கள்கிழமையும் 6-ஆவது நாளாக தொடா்ந்து வருகிறது.

காணாமல் போனவர்களின் நிலை குறித்து அறியாமல் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைகளிலும் சவக்கிடங்குகளிலும் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள். ஒரு நல்ல செய்தி கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். பலரும் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் உடல்களை கண்ணீருடன் ஓடி ஓடிச் சென்று பார்த்து வருகிறார்கள்.

ஏற்கெனவே ருத்ர தாண்டவமாடிய போடே கோஷி ஆற்றில், திடீரென ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீா்மட்டம் உயா்ந்தது. இதையடுத்து, மீட்புக் குழுவினா் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மழைக்கு இடையேயும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்துக்குக் காரணம், ஆக. 26-ஆம் தேதி நேபாள பெரு வெள்ளத்தின்போது திபெத் பகுதியில் பனிப்பாறை சரிந்து ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளத்தால் புதிதாக உருவான தடுப்பு ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வெளியேறியதே காரணம் என தகவல்கள் வெளியாகின.

வெள்ளப் பேரிடரில், நேபாளத்தில் மொத்தம் 354 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 8 நீா்மின் நிலையங்களும், கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்த 5 நீா்மின் நிலையங்களும் சேதமடைந்தன. இந்த நீா்மின் நிலைய சுரங்கப் பாதைகளில் நூற்றுக்கணக்கான பணியாளா்களும் சிக்கியுள்ளனா்.

இவற்றுக்கு இடையே ஆரம்பக்கட்ட சந்தேகத்தை வெளிப்படுத்தும் வகையில் சில சமூக ஊடக தகவல்கள் பரவி வருகின்றன. அவற்றில், பனிப்பாறை உடைந்த பகுதியில் சீனாவால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புகளே வெப்பம் அதிகரித்து பனிப்பாறை உடையக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பிடும் அப்பகுதியில் சீனாவின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள், அறிவியல் ரீதியான பகுப்பாய்வு குறித்து பெய்ஜிங் - காத்மாண்டு உடன்பாடு எட்டப்பட்டிருப்பது உண்மை என்றாலும், மேலுள்ள சந்தேகங்களையும் அப்பட்டமாக நிராகரித்து விட முடியாது என்றே தகவல்கள் கூறுகின்றன.

இது இயற்கைப் பேரிடரா? அல்லது சீனாவின் தண்ணீர் போரா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. திபெத்தில் கட்டப்பட்டிருந்த சீன அணை ஒன்று உடைந்ததே இதற்குக் காரணம் என்றும், இப்பகுதியில் சீனம் மிகப்பெரிய கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சில சர்வதேச ஊடகவியலாளர்களும் இந்தக் கருத்தை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். இந்திய-பிரிட்டிஷ் பத்திரிகையாளரான துங்கு வரதராஜன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் "சீனம், தனக்குக் கீழ்நிலையில் (ஆற்றுப் படுகையில்) உள்ள அனைத்திற்கும் மற்றும் அனைவரின் அழிவுக்கும் காரணமாக இருக்கும். இது நேரடியாகவும் மறைமுகமாவும் சரி - இரண்டிலுமே உண்மை என்று பதிவிட்டிருக்கிறார்.

பனிப்பாறை சரிந்தது ஏன்? என்ற கேள்விக்கு விடை காணப்படாத நிலையில், சீனத்தின் மீது சில சந்தேகப் பார்வைகள் எழுந்திருப்பதை தவிர்க்க முடியவில்லை.

summary

Is this a 'water war'? Nepal's massive floods and the accusations leveled against China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments