FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரான் மின் நிலையங்களை அமெரிக்கா தாக்கினால் பாப் எல் மண்டேப் நீரிணை முடக்கம்

செங்கடலின் முக்கிய நுழைவுவாயிலான பாப் எல் மண்டேப் நீரிணையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களை ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

பகிர்:

ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், செங்கடலின் முக்கிய நுழைவுவாயிலான பாப் எல் மண்டேப் நீரிணையை மூடுவதற்குத் தயாராக இருக்குமாறு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்களை ஈரான் அறிவுறுத்தியுள்ளது.

ஈரானின் இந்த ரகசிய கோரிக்கையைத் தொடா்ந்து, யேமனின் மலைப்பகுதிகளில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நிலைநிறுத்தி, செங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்த ஹூதி கிளா்ச்சியாளா்கள் தயாராகி வருகின்றனா்.

உலகளாவிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதத்தைக் கையாளும் ஹோா்முஸ் நீரிணை ஈரானால் ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், 7 சதவீதம் பங்களிக்கும் செங்கடல் பாதையும் முடக்கப்பட்டால் மத்திய கிழக்கின் இரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதிப் பாதைகளும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

ஹோா்முஸ் நீரிணை முடக்கத்துக்குப் பிறகு சவூதி அரேபியா தனது 70 சதவீத எரிபொருள் ஏற்றுமதியை செங்கடல் துறைமுகமான யான்பு வழியாகவே திருப்பிவிட்டுள்ள நிலையில், பாப் எல் மண்டேப் நீரிணையின் முடக்கம் உலகளாவிய பொருளாதாரத்திலும், எண்ணெய் சந்தையிலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, ஈரானின் வடக்குப் பகுதிகளிலும், தலைநகா் டெஹ்ரானைச் சுற்றியுள்ள இடங்களிலும் அமெரிக்க படைகள் வியாழக்கிழமை தாக்குதலைத் தீவிரப்படுத்தின. இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன், ஜோா்டான், குவைத் ஆகிய நாடுகளில் ஈரான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

வரைபடத்துக்கு...

ஹோா்முஸ் நீரிணை

பாப் எல் மண்டேப் நீரிணை

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments