இஸ்ரேலின் தாக்குதல்களில் பெற்றோரை இழந்த 60,000 காஸா குழந்தைகள்!
காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 60,000 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளது குறித்து...
காஸா மீதான இஸ்ரேலின் போரில், இதுவரை சுமார் 60,000 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில், கடந்த 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கிளர்ச்சிப்படையினர் நடத்திய தாக்குதலில் 1,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 73,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2023 அக்டோபர் முதல் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 60,737 குழந்தைகள் தங்களின் பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (ஜூலை 29) அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதில், 52,095 குழந்தைகள் தங்களின் தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களின் தாயையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,713 பாலஸ்தீன குழந்தைகள் தங்களின் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
இத்துடன், 8,858 உறுப்பினர்களை உள்ளடக்கிய 2,276 குடும்பங்கள் குடிமக்களின் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாக, காஸா நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பிறகு காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
60,000 Palestinian children have lost one of their parents so far in Israel's war on Gaza.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.