FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: நேபாள நாட்டைச் சேர்ந்தவர் பலி!

குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் பற்றி...

Updated On : 31 ஜூலை 2026, 4:37 pm IST
ட்ரோன் தாக்குதல். - கோப்புப்படம்.
பகிர்:

குவைத் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் நேபாள நாட்டைச் சேர்ந்த நபர் பலியானார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, குவைத்தை குறிவைத்து வியாழக்கிழமை ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 44 வயதான நபர் கொல்லப்பட்டார்.

அவர் நேபாள நாட்டைச் சேர்ந்த சோம் குமார் தமாங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

கொல்லப்பட்ட நபர் நேபாளத்தின் தெர்ஹது மாவட்டத்தில் வசித்து வந்தார் என்றும் அவர் குவைத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார் என்றும் குவைத்தில் உள்ள நேபாளத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குவைத்தில் வசிக்கும் அனைத்து நேபாளிகளும் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்குமாறு நேபாளத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருதரப்பும் மீண்டும் போரில் களமிறங்கியுள்ளன.

ஈரானுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகளின் கிளர்ச்சிப்படைகளும் களமிறங்கியுள்ளன.

summary

A Nepalese national, who was killed in a drone attack in Kuwait on Thursday, has been identified as Som Kumar Tamang.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments