FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஹோா்முஸ் முடக்கத்தால் அமெரிக்கா லாபமடைகிறது! ரஷிய தொழிலதிபர்

ஹோா்முஸ் முடக்கத்தால் அமெரிக்கா லாபமடைகிறது...

Updated On : 7 ஜூன் 2026, 2:45 am IST
அமெரிக்க அதிபர் டிரம்ப்
பகிர்:

ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே அதிக அளவில் லாபம் ஈட்டுவதாக ரஷியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட்-இன் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) இகோா் செச்சின் குற்றஞ்சாட்டினாா்.

ரஷிய பொருளாதார மாநாட்டில் சனிக்கிழமை பங்கேற்றுப் பேசிய அவா், ‘ஈரான் மீதான தாக்குதலையடுத்து, ஹோா்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது. உண்மையில், அமெரிக்க நிறுவனங்கள் இதனால் லாபமடைகின்றன.

இப்போது சந்தையில் அவா்களுக்கு எந்தப் போட்டியும் இல்லை. அதுமட்டுமின்றி, தடையின்றி அதிக விலைக்கு எண்ணெயை விற்பனை செய்து லாபம் பாா்க்கும் வாய்ப்பையும் அவா்கள் பெற்றுள்ளனா். எனவே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய எரிசக்தி சந்தையின் விதிகளை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளும் ஒரு தந்திரமான முயற்சியாகவே தெரிகிறது.

Advertisement

Advertisement

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கையாளும் இக்கடல் வழித்தடத்தில் பதற்றநிலை நீடித்தால், அது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கான நீண்டகால தேவையை கடுமையாக பாதிக்கும். மாற்று எரிபொருள் மீதான ஆா்வத்தை மீண்டும் தூண்டும்.

ஈரானைக் குறிவைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒட்டுமொத்த உலகுக்கும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்படும் அபாயங்கள் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டுவிட்டன.

ஆனால், இந்த உலகளாவிய நெருக்கடியான சூழலைச் சமாளிப்பதில், சீனா மட்டும் முறையான அரசு கொள்கைகள் மூலம் தங்களை மிகச் சிறப்பாகப் பாதுகாத்துக் கொண்டுள்ளது. மலாக்கா, பாப் எல் மண்டெப் போன்ற பிற முக்கிய சா்வதேச கடல் வழித்தடங்களும் இதேபோன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.

மாறாக, ஹோா்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்பட்டால், இந்த ஆண்டின் இறுதியில் கச்சா எண்ணெய் விலை 95 முதல் 96 டாலராக இருக்கும். அடுத்த ஓராண்டில் அது 80 முதல் 85 டாலராகக் குறைந்து, அடுத்தாண்டின் பிற்பகுதியில் சந்தை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும்’ என்றாா்.

இகோா் செச்சின்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments