ஒரு லட்சம் கோடி!! எலான் மஸ்க் சொத்து மதிப்பு இவ்வளவா?
ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டிய முதல் மனிதன் என்ற பெருமையை எலான் மஸ்க் அடைந்துள்ளார்.
உலகின் முதல் ஒரு லட்சம் கோடி சொத்துகளுக்குச் சொந்தக்காரராகி, ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மிகப்பெரிய நிதிசார் சாதனை இலக்கை எலான் மஸ்க் நிர்ணயித்திருக்கிறார்.
உலகிலேயே, ஒரு தனி நபரின் சொத்து மதிப்பு ஒரு லட்சம் கோடியை எட்டியிருக்கிறது என்றால் அது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் சொத்துதான்.
ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் விலைகளை மாற்றியமைத்ததன் மூலம், ஒரே நாளில், ஒரு லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்ட தொழிலதிபராக எலான் மஸ்க் மாறியிருக்கிறார்.
Advertisement
Advertisement
அதாவது, ஜூன் 12ஆம் தேதி நிலவரப்படி, உலகில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பைக் கொண்டே ஒரே ஒரு மனிதனாக எலான் மஸ்க் திகழ்கிறார்.
ராக்கெட், செயற்கைக்கோள், செய்யறிவு போன்ற துறைகளில் ஸ்பேஸ் எக்ஸ் செயலாற்றி வருகிறது. அதன் பங்குகள் விலைகள் இன்று மாற்றியமைக்கப்பட்டதன் மூலம், எலான் மஸ்க் சொத்து மதிப்பும் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்குச் சந்தைகளில் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் விலை உயர்வுக்கு முன்பும்கூட, உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராக 971 பில்லியன் டாலர்கள் என்ற சொத்துடன் எலான் மஸ்க்தான் முதலிடத்தில் இருந்தார். அவருக்கு அடுத்த இடத்தில் 304 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அல்ஃபாபெட் இணை நிறுவனர் லேரி பேஜ் 2ஆம் இடத்தில் உள்ளார். அதாவது, இரண்டாவது இடத்தில் இருக்கும் நபரை விட மூன்று மடங்கு அதிக சொத்தை எலான் மஸ்க் வைத்திருக்கிறார்.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு என்பது, பல நாடுகளின் ஆண்டு பொருளாதார மதிப்பை விட அதிகம். உதாரணமாக தைவான் நாட்டின் பொருளாதார மதிப்பு 976.7 பில்லியன் டாலர். இவ்வாறு பல நாடுகளைவிடவும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு அதிகம் என்பது தெரிய வந்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் பிறந்து, 1990-களில் இணையவழி வணிகங்களை உருவாக்கிய ஒரு தொழில்முனைவோராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இன்று பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையே (GDP) விஞ்சும் அளவிலான சொத்துக்களைக் கொண்ட 'டிரில்லியன்' மதிப்புள்ள சொத்துகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.
உலகின் முதல் ஒரு லட்சம் கோடி சொத்துகளுக்குச் சொந்தக்காரராகி, ஒவ்வொரு இளைஞர்களுக்கும் மிகப்பெரிய நிதிசார் சாதனை இலக்கை எலான் மஸ்க் நிர்ணயித்திருக்கிறார்.
Elon Musk has achieved the distinction of being the first person to reach a net worth of one lakh crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.