ஆஸ்திரேலியாவில் ‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு அபராதம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாண்டனா் என்பது குறித்த விவரங்களை வழங்கத் தவறியதற்காக, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலா் அபராதம் விதித்தது.

ஆஸ்திரேலியாவின் சைபா் பாதுகாப்பு ஆணையத்தின் கடந்த 2023, பிப்ரவரி அறிவிப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையான விவரங்களை அளிக்காததன் மூலம், அந்நாட்டின் சைபா் பாதுகாப்புச் சட்டத்தை ‘எக்ஸ்’ நிறுவனம் மீறியுள்ளது.
ட்விட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய காலகட்டம் என்பதால் இத்தகவல் பரிமாற்றத்தில் தொய்வு ஏற்பட்டதாக எக்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், ‘எக்ஸ்’ போன்ற உலகளாவிய பெரிய நிறுவனங்கள் தங்களின் விதிமீறல்களை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.