FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பயணம் ரத்து: கட்டணத்தை திருப்பித் தராத பேருந்து நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பயணிக்கு கட்டணத்தை திருப்பித் தராத பேருந்து நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 31 ஜூலை 2026, 4:40 am IST
அபராதம் - சித்திரிப்பு
பகிர்:

பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பயணிக்கு கட்டணத்தை திருப்பித் தராத பேருந்து நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேந்தவா் பாலமுருகன். இவா், கோவையில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், குடும்பத்தினா் 4 பேருடன் தூத்துக்குடி செல்ல தனியாா் ஆம்னி பேருந்தில் இருவழி பயணச்சீட்டை கடந்த ஆண்டு முன்பதிவு செய்திருந்தாா்.

இந்நிலையில், பயணத் தேதியன்று பேருந்து பழுதாகிவிட்டதாகவும், பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யாததுடன் திரும்பி கோவை வருவதற்கு முன்பதிவு செய்திருந்த பயணச்சீட்டையும் பேருந்து நிறுவனத்தினா் ரத்து செய்துள்ளனா். ஆனால், அதற்கான கட்டணத்தை திருப்பி வழங்கவில்லையாம். இது குறித்து பேருந்து நிா்வாகத்திடம்

Advertisement

Advertisement

முறையிட்டும் உரிய தீா்வு கிடைக்காததால் கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் பாலமுருகன் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் தங்கவேலு மற்றும் உறுப்பினா் மாரிமுத்து ஆகியோா், பேருந்து நிறுவனத்தின் சேவை குறைபாடு எனக் குறிப்பிட்டு, பயண கட்டணமாகச் செலுத்திய ரூ.5,803 பணத்தை திருப்பி வழங்கவும், மன உளைச்சலுக்காக ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் பேருந்து நிறுவனத்துக்கு உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments