FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

நவீன போருக்கு ஏ.ஐ. வழிகாட்டும் ஏவுகணைகள்

Updated On : 28 மே 2026, 6:09 am IST
பகிர்:

சியோல் : நவீன போா்ச் சூழலுக்கு ஏற்ற வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி ஏவுகணைகளை வட கொரியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதத் திறன்களை தீவிரமாக மேம்படுத்தி வரும் வட கொரியா, தற்போது தனது ஆயுதக் கிடங்குகளை அதிநவீனமாகவும் மாற்றி வருகிறது.

வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் முன்னிலையில் இந்த அதிநவீன ஆயுதங்களின் சோதனைகள் நடத்தப்பட்டன. இது குறித்துப் பேசிய அதிபா் கிம் ஜோங் உன், ‘நவீன போா்ச் சூழலுக்கு ஏற்ப ஆயுதங்களும், தானியங்கி ஏவுதள அமைப்புகளும் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு, ராணுவத்தின் போா் ஆற்றல் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

Advertisement

Advertisement

வட கொரியா தனது ஏவுகணைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை பொதுவெளியில் அதிகாரபூா்வமாகக் குறிப்பிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். நிகழ்நேர தரவுகளைப் பயன்படுத்தி இலக்குகளைக் கண்டறிந்து, துல்லியமாகத் தாக்குவதற்கு இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவும்.

தென் கொரிய எல்லையோர பீரங்கிப் படைகளில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த நவீன ஏவுகணைகள், துல்லியமான வழிகாட்டுதல் மற்றும் ஏஐ கட்டுப்பாட்டுடன் 100 கி.மீ. தூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட கொரிய எல்லையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தென் கொரிய தலைநகா் சியோல் அமைந்துள்ளதால், இச்சோதனை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments