FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துல்! இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?

மிச்சிகன் மாகாணத்தின் செனட்டராக தேர்வாகியுள்ள அப்துல் எல்-சயீத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு குறித்து...

மிச்சிகன் மாகாணத்தின் செனட்டராக தேர்வாகியுள்ள அப்துல் எல்-சயீத் மற்றும் அவரது மனைவி சாரா ஜுகாகு - AP
பகிர்:

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக செனட் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் முஸ்லீம் வேட்பாளரான அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் 435 பிரதிநிதிகள் அவை இடங்களுக்கும், 35 செனட் அவை இடங்களுக்கும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (நவ. 4) காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மிச்சிகன் மாகாணத்தின் செனட் அவைப் பதவிக்குப் (செனட்டர்) போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க செனட் அவையில் இடம்பெறும் முதல் முஸ்லீம் எனும் பெருமையை எல்-சயீத் அடைந்துள்ளார்.

இவருக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவளித்து வந்த நிலையில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்துல் ஒரு பயங்கரவாதி எனக் குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்தனர்.

எகிப்து நாட்டை பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கு எல்-சயீத் கடந்த 1984 ஆம் ஆண்டு மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தார். மருத்துவரான இவர் இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகளின் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

அப்துல் எல்-சயீத் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாரா ஜுகாகு எனும் மனநல மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சாரா ஜக்குவின் தாய் தந்தையர் ஆகிய இருவரும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிப்பெயர்ந்தவர்கள். சாராவின் தந்தையும், சிறுநீரக மருத்துவருமான தையப் ஜுகாகு கர்நாடகத்தின் பட்கல் பகுதியைச் சேர்ந்தவர்.

தையப் ஜுகாகுவின் தந்தை ஷம்சுதீன் ஜுகாகு ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞராகவும், அன்றைய மைசூர் மாநிலத்தின் துணை நிதியமைச்சராகவும் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

summary

For the first time in American history, a Muslim candidate from the Democratic Party, Abdul El-Sayed, has won a Senate election.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.