FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

சீன விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பாகிஸ்தான் விண்வெளி வீரா்

சீனாவின் விண்வெளி நிலையத்துக்குப் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த விண்வெளி வீரா் ஒருவா் விரைவில் பயணிக்கவுள்ளதாக உள்ளதாக சனிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

8 நவம்பர் 2026, 1:17 am
சீன விண்வெளி நிலையம் - Photo: cnsa.gov.cn
பகிர்:

சீனாவின் விண்வெளி நிலையத்துக்குப் பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த விண்வெளி வீரா் ஒருவா் விரைவில் பயணிக்கவுள்ளதாக உள்ளதாக சனிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது.

சீனாவில் இருந்து இம்மாத இறுதியில் ஏவப்படும் ‘ஷென்சூ-24’ விண்கலப் பயணக் குழுவில் இணையவுள்ள பாகிஸ்தான் வீரா், விண்வெளியில் குறுகிய காலப் பயணத்தை நிறைவு செய்த பின்னா், ‘ஷென்சூ-23’ விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்புவாா். சீன விண்வெளி வீரா்கள் வழக்கமாக விண்வெளியில் சுமாா் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளும் நிலையில், பாகிஸ்தான் வீரரின் இப்பயணம் மிகக் குறுகிய கால அளவைக் கொண்டதாக மட்டுமே அமையும்.

சீனாவின் விண்வெளி நிலையம் வெளிநாட்டு விண்வெளி வீரா் ஒருவரை வரவேற்பது இதுவே முதல் முறையாகும். இதன்மூலம், சீனாவின் மனித விண்வெளிப் பயண வரலாற்றிலேயே முதல்முறையாக சீனா, வெளிநாட்டு வீரா்கள் இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயணமாக இத்திட்டம் அமைகிறது.

Advertisement

Advertisement

இந்த விண்வெளிப் பயணம் தொடா்பாக கடந்த 2025-இல் இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அதைத் தொடா்ந்து நடைபெற்ற மூன்று கட்டத் தீவிர தோ்வுகள் மற்றும் மதிப்பீடுகளின் முடிவில், பாகிஸ்தானைச் சோ்ந்த இருவா் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்குச் சீனாவில் முழு பயிற்சிகள் வழங்கப்பட்டு, தகுதி மதிப்பீடும் நிறைவடைந்துள்ளது. அவா்களில் ஒருவா் தற்போதைய விண்வெளிப் பயணத் திட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், மற்றொருவா் மாற்று விண்வெளி வீரராக இருப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Pakistani astronaut to visit Chinese space station