FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாகிஸ்தானின் முதல் வீரரை விண்வெளிக்கு அனுப்பும் சீனா!

பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரரை சீனா விண்ணுக்கு அனுப்பவுள்ளது பற்றி...

20 அக்டோபர் 2026, 1:22 pm IST
கோப்புப்படம் - Photo: X | @ChinaCG_Muc
பகிர்:

பாகிஸ்தானின் முதல் விண்வெளி வீரர் சீன விண்கலம் மூலம் வருகின்ற நவம்பர் 25 அன்று விண்வெளிக்குச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், விண்வெளிக்குச் சென்ற குடிமக்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் வரலாற்று பட்டியலில் பாகிஸ்தானும் இணையவுள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட பாகிஸ்தானின் சிறப்பு முயற்சிகள் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், “சீனாவின் ஒத்துழைப்புடன், விண்வெளி ஆராய்ச்சித் துறையில் பாகிஸ்தான் புதிய உயரங்களை எட்டவுள்ளது” என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த திட்டத்துக்காக பாகிஸ்தான் விமானிகள் ஜீஷான் அலி மற்றும் குர்ரம் தாவூத் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு, பெய்ஜிங்கிலுள்ள சீன விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் தீவிரப் பயிற்சி பெற்றுள்ளனர்.

இவர்கள் இருவரில் ஒருவர் மட்டுமே விண்வெளிக்குச் செல்லவுள்ளார். இம்மாத கடைசியில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்வெளி வீரர், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் முதல் வீரர் ஆவார்.

இவர், தியாங்காங் விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரம் தங்கி, பாகிஸ்தான் சார்பாக அறிவியல் சோதனைகளை நடத்தும் நிபுணராக பணியாற்றவுள்ளார்.

லூனார் ரோவர்

சீனாவுடன் இணைந்து விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை தவிர, நிலாவை ஆய்வு செய்யும் திட்டங்களிலும் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

2028 ஆம் ஆண்டில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள சீனாவின் ’சாங் இ - 8’ திட்டத்தில், பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட நிலாவை ஆய்வு செய்யும் ’லூனார் ரோவர்’ அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், 2035 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தரையிறங்குவதை இலக்காக கொண்டு பாகிஸ்தான் பணியாற்றி வருவதாக அந்நாட்டின் அமைச்சர் இக்பால் தெரிவித்துள்ளார்.

summary

China to send Pakistan's first astronaut into space!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments