டிரம்ப் அறிவித்த எரிசக்தி போர்நிறுத்தம் குறித்து நாங்கள் விவாதித்தோம்: உக்ரைன் அதிபர்
டிரம்ப் அறிவித்த எரிசக்தி போர்நிறுத்தம் குறித்து நாங்கள் விவாதித்தோம் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டிரம்ப் அறிவித்த எரிசக்தி போர்நிறுத்தம் குறித்து நாங்கள் விவாதித்தோம் என உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தனது ட்ரூத்சோசியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், ரஷியா - உக்ரைன் இடையே எரிசக்தி போர்நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இரு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இதை மீறாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அதுதொடர்பான நிபந்தனைகள் பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி பேட்டி ஒன்றில், "டிரம்ப் அறிவித்த எரிசக்தி போர்நிறுத்தம் குறித்து நாங்கள் விவாதித்தோம். உக்ரைன் இந்த போர்நிறுத்தத்தை ஆதரிக்கிறது. ரஷியாவும் இதை ஆதரிப்பது முக்கியம். அமெரிக்கத் தரப்பிலிருந்து மேற்கொண்டு விவரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.
மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னி, பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோருடன் பேசியதாகவும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ரஷியா நிறுத்தினால், ரஷியாவின் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த உக்ரைன் தயாராக இருப்பதாகவும், அதற்கு ஒப்புக்கொள்ள ரஷியாவை வலியுறுத்துமாறு டிரம்ப்பை கேட்டுக் கொண்டதாகவும் ஸெலென்ஸ்கி கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி ரஷியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை
We discussed the energy ceasefire announced by Trump: Ukraine President
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.