உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா நீடிக்கிறது: வினய் குவாத்ரா
இந்தியா 7.8% பொருளாதார வளர்ச்சியுடன், உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது என வினய் பேசியிருப்பது குறித்து...
இந்தியா 7.8% பொருளாதார வளர்ச்சியுடன், உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாகத் தொடர்ந்து நீடிக்கிறது என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள நாஸ்டாக் பங்குச் சந்தையில் வர்த்தகத்தைத் தொடங்கி வைக்கும் மணி ஒலித்தபோது, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் வினய் குவாத்ரா இதனைத் தெரிவித்தார்.
உலகளாவிய இடையூறுகள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில், 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதுடன், உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.
Advertisement
Advertisement
ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான இந்தியாவின் சமீபத்திய ஜிடிபி வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய குவாத்ரா, இந்தியாவின் நிலையான கொள்கைகள் உலகளாவிய முதலீட்டாளர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிகள், உள்நாட்டு உற்பத்தி போன்றவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியா 2047 (விக்சித் பாரத் 2047) என்ற இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், அமெரிக்க வணிக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அமைப்புகளுடன் இன்னும் வலுவான கூட்டாண்மையை ஏற்படுத்த இந்தியா ஆவலுடன் காத்திருப்பதாக குவாத்ரா கூறினார்.
இந்தியா தொடர்ந்து தனது பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதால், வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சி வேகம் நீடிக்கும் என சர்வதேச பொருளாதார அமைப்புகள் கணித்துள்ளன.
India’s 7.8 per cent GDP growth in the first quarter of the 2026-27 fiscal year continues the country’s trajectory as the fastest-growing large economy in the world, Indian Ambassador to the US
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.