FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தோனேசியா: அரசின் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட 2,000 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு!

இந்தோனேசிய அரசின் இலவச உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவைச் சாப்பிட்ட 2,000 பேருக்கும் உடல் நலம் பாதிப்பு...

55 வினாடிகள் முன்பு
இந்தோனேசியாவில் அரசின் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட 2,000 பேருக்கு உடல் நலம் பாதிப்பு... - AP
பகிர்:

இந்தோனேசிய அரசின் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்பட சுமார் 2,000 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோவின் முக்கிய இலவச உணவுத் திட்டத்தின் கீழ் அந்நாட்டின் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் வியாழக்கிழமை வரையிலான காலத்தில் இலவச உணவுத் திட்டத்தில் சாப்பிட்ட 1,950 மாணவர்கள் உள்பட சுமார் 2,000 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் மயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில், மத்திய ஜாவா மாகாணத்தில் 752 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள், கிழக்கு ஜாவாவில் 730 பேர், மேற்கு சுமத்ராவில் 276 பேரும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அச்சே மற்றும் தெற்கு சுலாவேசி மாகாணங்களிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, இந்தோனேசியாவில் கடந்த 2025 ஜனவரியில் எம்ஜிபி எனும் இலவச உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதுவரை அந்நாட்டின் 36 மாகாணங்களிலுள்ள, 245 மாவட்டங்களில் 50,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இந்தோனேசிய சுகாதார அமைச்சம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

2,000 people, including thousands of students, have fallen ill after consuming food provided under the Indonesia's free meal scheme.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments