FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பலி

அமெரிக்காவில் அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது பற்றி....

7 செப்டம்பர் 2026, 1:31 pm IST
விபத்துக்குள்ளான விமானம்.
பகிர்:

அமெரிக்காவில் அமேசான் பிரைம் ஏர் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சான் ஜுவான், பியூர்டோ ரிக்கோவிலிருந்து வந்த போயிங் ரக பிரைம் ஏர் விமானம் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஓடுபாதையைத் தாண்டிச் சென்று பல வாகனங்கள் மீது மோதி தீப்பற்றியது.

இதனால் அப்பகுதியில் அடர்ந்த புகை மண்டலம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

தீயை அணைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் மியாமி-டேட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதில் 5 பேர் பலியானதோடு 5 பேர் காயமடைந்தனர்.

விபத்து காரணமாக விமான நிலையத்தில் உள்ள அனைத்து ஓடுபாதைகளும் மூடப்பட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

அமேசான் ஏர் விமானம் விபத்தில் சிக்கியதை அமேசான் செய்திப்பொடர்பாளர் கெல்லி நாண்டெல் உறுதிப்படுத்தினார். இவ்விபத்து குறித்து எஃப்.ஏ.ஏ எனப்படும் விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்தவுள்ளது.

மேலும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் தகவல்களைச் சேகரித்து வருகிறது.

summary

At least five people were killed after an Amazon Prime Air cargo plane operated by 21 Air crashed while landing at Miami International Airport. Amazon said it was supporting those affected, while the FAA will investigate the incident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments