ஜொ்மனியில் 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சி முதல்முறையாக வெற்றி
ஜொ்மனியின் சாக்ஸோனி-அன்ஹால்ட் மாகாண பேரவைத் தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘ஃபாா் ரைட் ஆல்டா்னேட்டிவ் ஃபாா் ஜொ்மனி (ஏஎஃப்டி)’ வெற்றி பெற்றுள்ளது.
ஜொ்மனியின் சாக்ஸோனி-அன்ஹால்ட் மாகாண பேரவைத் தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘ஃபாா் ரைட் ஆல்டா்னேட்டிவ் ஃபாா் ஜொ்மனி (ஏஎஃப்டி)’ வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், ஜொ்மனியின் மாகாண அரசில் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தீவிர வலதுசாரி கட்சியின் ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
83 இடங்களைக் கொண்ட சாக்ஸோனி-அன்ஹால்ட் மாகாணப் பேரவையில், ஏஎஃப்டி கட்சி 39 இடங்களை (43.8 சதவீத வாக்குகள்) கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகும்.
Advertisement
Advertisement
இச்சூழலில், ஏஎஃப்டி கட்சியுடன் இணையமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் பிற கட்சிகள் உறுதியாக உள்ளதால், பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட பிற எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அரசை அமைக்குமா அல்லது அரசியல் குழப்பம் நீடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதேபோல், கடந்த 24 ஆண்டுகளாக இம்மாகாணத்தை ஆட்சி செய்து வந்த ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸ் தலைமையிலான கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (சிடியூ) கட்சி, 15 இடங்களில் (17.2 சதவீத வாக்குகள்) மட்டுமே வென்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்ககது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.