FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்கா: கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு!

கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்புவின் உடலிலிருந்து அந்த பந்துகள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டது குறித்து....

25 செப்டம்பர் 2026, 4:18 pm IST
- Photo credit: The Independent TV
பகிர்:

அமெரிக்காவில் கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்புவின் உடலிலிருந்து அந்த பந்துகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு பாம்பு ஒன்று ஏதோ விழுங்கிவிட்டதாக அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டது. உடனே அவற்றை அறுவை சிகிச்சை இல்லாமல் பாதுகாப்பாக வெளியே எடுக்கும் சவாலை கால்நடை மருத்துவர்கள் எதிர்கொண்டனர்.

பின்னர் மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் பாம்பின் உடலிலிருந்து அந்த மூன்று கோல்ஃப் பந்துகளை ஒன்றன் பின் ஒன்றகாக வெளியே மீட்டனர். இச்சிகிச்சையின் போது அந்தப் பாம்பிற்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டதாகவும், இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்தது.

Advertisement

Advertisement

இது குறித்து அந்த மருத்துவமனை கூறுகையில், இது நிச்சயமாக ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்று குறிப்பிட்டுள்ளது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த விடியோ அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. முட்டை என நினைத்து பாம்பு அந்த பந்துகளை விழுங்கியிருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

summary

A team of veterinarians pulled off an incredible rescue after a snake swallowed three golf balls.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments