பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
பரவும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

இந்தியாவில் ஒரே நாளில் 10,956 பேருக்கு கரோனா தொற்று

நாட்டில் 24 மணி நேரத்தில் 10,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,86,579-லிருந்து 2,97,535-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 396 பேர் பலியானதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை  8,102-லிருந்து 8,498-ஆக உயர்ந்துள்ளது. 

 

ஜெர்மனியில் மேலும் 555 பேருக்கு கரோனா தொற்று; பாதிப்பு 1.85 லட்சமாக உயர்வு!

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 555 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 1,85,416 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,86,579-ஆக உயர்வு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 9,996 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,76,583-லிருந்து 2,86,579-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு 24 மணி நேரத்தில் 357 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 7,745-லிருந்து 8,102-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,35,206-லிருந்து 1,41,029-ஆக உயர்ந்துள்ளது. 

உலகளவில் கரோனா பாதிப்பு: 4-ஆம் இடத்தில் இந்தியா

உலகளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடுகளில் இந்தியா 4-ஆம் இடத்தை அடைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தில்லியில் இன்று மட்டும் 1,877 பேருக்கு கரோனா உறுதி

தில்லியில் புதிதாக 1,877 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: 3,607 பேருக்கு தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் புதிதாக 3,607 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தாராவியில் மேலும் 2 பேர் கரோனாவுக்கு பலி

தாராவியில் புதிதாக 20 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா தொற்று: மாவட்டவாரியாக விவரம்

தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,407 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா: சென்னையில் மட்டும் 1,407

தமிழகத்தில் புதிதாக 1,875 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தைக் கடந்தது! ஒரேநாளில் 8,779 பேருக்கு தொற்று உறுதி

 ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,779 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 5,834 பேருக்கு தொற்று

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,834 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,19,536 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரருக்கு கரோனா தொற்று உறுதியானது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப்-க்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை: அமைச்சர் அறிவிப்பு

 கர்நாடகத்தில் 7-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
 

கர்நாடகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை: அமைச்சர் அறிவிப்பு

 கர்நாடகத்தில் 7-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
 

கர்நாடகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை: அமைச்சர் அறிவிப்பு

 கர்நாடகத்தில் 7-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
 

சபரிமலை கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: தேவஸ்வம் போர்டு அறிவிப்பு

மாதாந்திர பூஜைக்காக ஜூன் 14-ஆம் தேதி சபரிமலை கோயில் திறக்கப்படும் நிலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் பாதுகாப்பான இடமாக இருக்கும் ஒரே மண்டலம் மணலி

 சென்னையில் நாள்தோறும் உயர்ந்து வரும் கரோனா பாதிப்புகளைப் பார்க்கும் போது சென்னைவாசிகளுக்கு மனதளவில் ஒரு கலக்கம் பிறக்கத்தான் செய்கிறது. நாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோமா? விரிவான செய்திக்கு..

மும்பையில் தணிந்து வரும் கரோனா பாதிப்பு: நன்றி தாராவி

 சீனாவின் வூஹான் மாகாணத்தோடு ஒப்பிடும் அளவுக்கு இந்தியாவில் மும்பை நகரம் கரோனா பாதிப்பில் உச்சத்தைக் கண்டுவந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக கடந்த சில நாட்களாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. விரிவான செய்திக்கு..

கரோனா பேரிடரை நல்வாய்ப்பாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி உரை

 தற்சார்பு இந்தியாவுக்கான திருப்பு முனையாக கரோனா போராட்டத்தையே நமக்கான நல்வாய்ப்பாக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

ஜெர்மனியில் மேலும் 318 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,84,861 ஆக உயர்வு!

 ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 318 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா அவலம்: 10 அடி தூரத்தில் டார்ச் அடித்து சிகிச்சை பார்த்த மருத்துவர்

உலகையே உலுக்கிய கரோனா தீநுண்மியால் மக்கள் படும்பாடு சொல்லில் மாளாது. உயிரிழப்பு முதல் வாழ்வாதாரம் பறிபோனது வரை ஆயிரமாயிரம் துயரங்களை மக்களுக்கு அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா: பலி 279

 இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 9,985 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு 2,76,583-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

“என் அன்புச் சகோதரா அன்பழகா.. இனி என்று காண்போம் உன்னை..” - மு.க.ஸ்டாலினின் உருக்கமான இரங்கல்!

 கரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க, திமுக முன்னெடுத்த செயல்திட்டங்களைச் சிறப்புடன் நிறைவேற்றுவதற்காக சிறிதும் ஓய்வின்றி களப்பணியாற்றி ஜெ.அன்பழகன் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். விரிவான செய்திக்கு..

கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் காலமானார்

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு பலியான முதல் எம்எல்ஏ ஜெ.அன்பழகன்

 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் (62) சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை சுமார் காலை 8 மணியளவில் காலமானார். அவருடை பிறந்த தினமான இன்று அவர் காலமானார் என்ற செய்தி திமுகவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதல் அரசியல் பிரமுகர், சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆவார்.

அமெரிக்காவில் நேற்றைவிட இருமடங்கு உயிரிழப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் பலி

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 819 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 25 ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் மட்டும் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டி 25,937 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ரஷியாவில் கரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது! நேற்று மட்டும் 8,404 பேருக்கு தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,404 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,93,657 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
 

கரோனா வைரஸ் உருமாற்றம் இல்லை; உயிரிழந்தவர்கள் குறித்து ஆராய சிறப்புக்குழு: பீலா ராஜேஷ்

கரோனா வைரஸ் உருமாற்றம் பெற்றதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிக்காக 1,239 மருத்துவர்கள் உள்பட 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 1,927 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,385 பேருக்கு தொற்று உறுதி!

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,385 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,13,702 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

 

ராயபுரத்தில் 4,192 பேருக்கு கரோனா; ஆயிரத்தை நெருங்கும் திருவொற்றியூர்

 சென்னை ராயபுரத்தில் 4,192 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் தண்டையார்பேட்டையில் 3,192 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் சமூகப் பரவல் உள்ளது; மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம்: அமைச்சர் தகவல்

 தில்லியில் சமூகப் பரவல் உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

ஜெர்மனியில் வெகுவாக குறைந்துவரும் கரோனா பாதிப்பு!

 ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 252 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ராயபுரத்தில் கரோனா 4,000-ஐ தாண்டியது; 6 மண்டலங்களில் 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

 சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை எட்டியது. 6 மண்டலங்களில் 16 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

மருத்துவமனை படுக்கை விவரங்களை அறிய 'ஸ்டாப் கரோனா' இணையதளம்: தமிழக அரசு

 தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்க காலியாக இருக்கும் படுக்கை வசதி குறித்து பொதுமக்கள் இணையதளம் வாயிலாகவே கண்டறிந்து கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேர் பலி

 அமெரிக்காவில் கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,10,932 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா: உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 71,98,634 ஆக உயர்வு

 உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,198,634 ஆக உயர்ந்துள்ளது.  விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,987 பேருக்கு கரோனா தொற்று, 331 பேர் பலி

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,987 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2.66 லட்சமாக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

நியூசிலாந்துபோல் சென்னையையும் கரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம்: அமைச்சர் உதயகுமார்

 நியூசிலாந்துபோல் சென்னையையும் கரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கேரளத்தில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 91 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் 90 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 2,259 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் மட்டும் 1,243 பேருக்கு கரோனா உறுதி: மாவட்டவாரியாக விவரம்

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 1,243 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 1,685 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) புதிதாக 1,685 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஜோதிராதித்ய சிந்தியா, தாய் மாதவி ராஜேவுக்கு கரோனா உறுதி

பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாய் மாதவி ராஜேவுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு..

 

'உம்பன்' புயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட என்.டி.ஆர்.எஃப். படையினர் 50 பேருக்கு கரோனா

மேற்கு வங்கத்தில் 'உம்பன்' புயல் பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட 50 தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு (என்.டி.ஆர்.எஃப்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 171 பேர் பலி; மேலும் 8,595 பேருக்கு தொற்று

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,595 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 4,85,253 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா தொற்று: சென்னையில் ஆம்புலன்ஸ் சேவை பெற புதிய உதவி எண் அறிவிப்பு

 கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்தியேக தொலைபேசி எண்கள் அறிவித்தும், கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஏற்படுத்தியும் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு.. 

கரோனா அறிகுறி: ஜோதிராதித்ய சிந்தியா, தாய் மருத்துவமனையில் அனுமதி

 தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு வந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், அவரது தாய் மாதவி ராஜே சிந்தியாவுக்கும் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருப்பதால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விரிவான செய்திக்கு..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா பாதிப்பு

 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழு நாள்களுக்கு முன்பு, அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை தனிமைப்படுத்தி, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 26 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அனைவரது கரோனா பரிசோதனை முடிவுகளும் நேற்று இரவு கிடைத்துள்ளது. அதில், 26 பேருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஜெய்ப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கரோனா எதிரொலி: தில்லியில் சவக்குழிகளுக்கு முன்பதிவு செய்ய வேண்டிய அவலம்

 ரயில் மற்றும் திரையரங்குகளுக்கு முன் பதிவு செய்யும் வசதியை மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த நிலையில், கரோனா எதிரொலியால் தில்லியில் சவக்குழிகளுக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டிய அவலம் நேரிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் சமூகப் பரவல் இல்லை: மத்திய அரசு தகவல்

 தில்லியில் சமூகப் பரவல் இல்லை என மத்திய அரசு கூறுவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com