பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...

உத்தரப்பிரதேசத்தின் கரோனா அபாயப் பகுதியாக மாறியது ஆக்ரா

 ஆக்ரா: அதிகபட்சமாக ஆக்ராவில் ஒரே நாளில் 39 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கரோனா பரவும் அதிக வாய்ப்பு உள்ள அபாயப் பகுதியாக அப்பகுதி மாறியுள்ளது.விரிவான செய்திக்கு..

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு 120 பேர் பாதிப்பு, 7 பேர் பலி: மாநில சுகாதாரத்துறை

 மேற்குவங்கத்தில் கரோனாவுக்கு இதுவரை 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. 7 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

அதிகரிக்கும் மரணங்கள்: பிரிட்டனில் ஒரே இடத்தில் உடல்கள் புதைப்பு

கரோனா தொற்றால் தொடர்ந்து அதிகளவில் உயிரிழப்புகள் நேர்ந்து வரும் நிலையில் லண்டனில் ஒரே இடத்தில் அதிகளவிலான பெரியளவில் புதைகுழிகள் தோண்டி சடலங்களைப்  புதைக்கின்றனர். விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 10,815; பலி 353 ஆக அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,815 ஆகவும் பலி எண்ணிக்கை 353 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

திண்டுக்கலில் மேலும் 9 பேருக்கு கரோனா: மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,204 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

மும்பையில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம்

வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

தென்காசி மாவட்டத்திலும் முகக்கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கரோனா; 31 பேர் பலி - மத்திய சுகாதாரத் துறை

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ட்விட்டர் புகைப்படத்தை மாற்றிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார். விரிவான செய்திக்கு..

நாட்டுப்படகுகளில் தொடர்ந்து மீன் பிடிக்கலாம்: தமிழக அரசு

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளில் தொடர்ந்து மீன் பிடிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

டி.டி.எஸ். தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு?

வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்ய தேதி நீடிக்கப்பட்டுள்ள நிலையில், டி.டி.எஸ். தாக்கல் செய்யவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தெரிகிறது. விரிவான செய்திக்கு..

ஊழியருக்கு கரோனா: வியட்நாம் சாம்சங் ஆலைக்கு சீல்!

வியட்நாமில் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஆட்சியில் இருக்கிறோமோ இல்லையோ, மக்களுக்கு காங்கிரஸ் உதவும்: சோனியா

 புது தில்லி: கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பொதுமக்களுக்கு காங்கிரஸ் கட்சி உதவும் என்றும், கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் விரைவாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.விரிவான செய்திக்கு..

அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன; கவலைப்பட வேண்டாம்: அமித் ஷா

 புது தில்லி: மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தேவையான அளவுக்கு கையிருப்பில் உள்ளன, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதை நினைத்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு..

சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் விவரம்

 சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

25 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பில்லை

 புது தில்லி: இந்திய அளவில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வந்தாலும், நல்ல செய்தியாக, ஏற்கனவே கரோனா பாதித்த நோயாளிகள் இருக்கும் 25 மாவட்டங்களில்ல் கடந்த 2 வாரங்களாக யாருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. விரிவான செய்திக்கு..

பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

கரோனா போன்ற பேரிடர் காலத்தில் தனது சேவை நாட்டுக்கு முக்கியம் என்று கருதிய ஐஏஎஸ் அதிகாரி, பிரசவ கால விடுப்பை ரத்து செய்துவிட்டு கைக்குழந்தையோடு பணிக்குத் திரும்பியுள்ளார். விரிவான செய்திக்கு..

பிரிட்டனில் சவப் பைகளுக்குத் தட்டுப்பாடு

 லண்டன்: பிரிட்டனில் கரோனா பாதிப்பும், கரோனா பாதித்தவர்களின் மரணமும் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் சவப் பைகளுக்கான தட்டுப்பாடு. விரிவான செய்திக்கு..

தேசிய ஊரடங்கு நீட்டிப்பு: இன்று அறிவிப்பு?

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் தேசிய ஊரடங்கு செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.14) நிறைவடையவுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் தில்லியிலிருந்து சென்னை, கேரளத்துக்கு 13 ரயில்களில் பயணம்?

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பலா் மாா்ச் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தில்லியில் இருந்து தமிழகம், கேரளம் நோக்கி சென்ற 13 ரயில்களில் பயணம் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதன்மூலம், குறிப்பிட்ட அந்த ரயில்களில் பயணித்த பயணிகள், ரயில்வே ஊழியா்கள், ஆா்.பி.எஃப் வீரா்கள் ஆகியோா் தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு.. 

உலகளவில் கரோனாவால் பலி எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது

 உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் அதிகபட்சமாக கரோனா வைரஸால் 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22,115 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 17,209 பேரும், இத்தாலியில் 19,899 பேரும், பிரான்சில் 14,393, பிரிட்டனில் 10,612 பேரும் கரோனாவால் பலியாகி உள்ளனர். 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 9,152 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 273-லிருந்து 308 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 716-லிருந்து 857 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலி

  அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 1514 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த பலி எண்ணிக்கை 22,115 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 352 பேருக்கு கரோனா தொற்று உறுதி

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 352 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..

சென்னையில் முகக் கவசம் கட்டாயம், உடனடி அமல்: மாநகராட்சி அறிவிப்பு

 சென்னையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ராஜஸ்தானில் புதிதாக 43 பேருக்கு கரோனா பாதிப்பு

 ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 847 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 20 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். 11 பேர் பரத்பூர் மற்றும் 7 பேர் ஜோத்பூரைச் சேர்ந்தவர்கள் என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லி, தெலங்கானாவை தொடர்ந்து பஞ்சாப் காவலருக்கும் கரோனா

லூதியானா: தில்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த காவல்துறையினருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பஞ்சாப் காவலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகாலாந்தில் முதல் நபருக்கு கரோனா உறுதி

நாகாலாந்தில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது...விரிவான செய்திக்கு

பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறையிலுள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது

 மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்தை தாண்டியது. இங்கு இன்று மட்டும் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மும்பையில் 59 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,064ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் மருத்துவர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா பாதிப்பு

புது தில்லி: இந்தியாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 90 மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஆந்திர மக்களுக்கு தலா 3 முகக்கவசங்கள் வழங்குகிறது ஜெகன்மோகன் அரசு

விஜயவாடா: கரோனா தொற்றில் இருந்து காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 3 முகக்கவசங்களை வழங்க ஜெகன்மோகன் அரசு முடிவு செய்துள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com