அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...
அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்... 

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவால் 1,514 பேர் பலி

 அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த் தொற்றுக்கு 1514 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் மொத்த பலி எண்ணிக்கை 22,115 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 9,152 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,356 லிருந்து 9,152 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 273-லிருந்து 308 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 716-லிருந்து 857 ஆக அதிகரித்துள்ளது. 

உலகளவில் கரோனாவால் பலி எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது

 உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் அதிகபட்சமாக கரோனா வைரஸால் 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 22,115 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் 17,209 பேரும், இத்தாலியில் 19,899 பேரும், பிரான்சில் 14,393, பிரிட்டனில் 10,612 பேரும் கரோனாவால் பலியாகி உள்ளனர். 

 

திருப்பூரில் ஒரே நாளில் 35 பேருக்கு தொற்று உறுதி: தமிழகத்தின் இன்றைய நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

10 ஆயிரத்தைத் தாண்டியது பிரிட்டனின் பலி

பிரிட்டனில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 10,000-ஐத் தாண்டியது. விரிவான செய்திக்கு..

தில்லியில் 24 மணி நேரத்தில் 5 பேர் பலி, 85 பேருக்கு தொற்று உறுதி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் பலியாகியிருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: உயிரிழப்பு 11 ஆக உயர்வு

கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி ஞாயிக்கிழமை காலை உயிரிழந்தார். 

இந்தியாவில் கரோனா பாதிப்பு 8,447; பலி 273 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,447 ஆகவும் பலி எண்ணிக்கை 273 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 106 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு..

கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

ஈரோடு பெருந்துறையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு கரோனா உறுதி; 34 பேர் பலி - மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909  பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஹரியாணாவில் கரோனா பாதிப்பு 179 ஆக உயர்வு!

ஹரியாணாவில் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சவூதி அரேபியாவில் காலவரம்பின்றி ஊரடங்கு நீட்டிப்பு

சவூதி அரேபியாவில் காலவரம்பின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

22 ஆயிரம் மருத்துவ - சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று!

உலகில் 52 நாடுகள் மற்றும் பகுதிகளில் 22 ஆயிரம் மருத்துவ - சுகாதாரப் பணியாளர்கள்  கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்  என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் மோசமாக இருக்கும்: உலக வங்கி

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் முப்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதார சீர்திருத்தத்தின்போது இருந்ததைவிட மோசமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சேலத்தில் சீல் வைக்கப்பட்ட 70 இடங்களில் கடைகளை திறக்கத் தடை

சேலம் மாநகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சீல் வைக்கப்பட்ட 70 இடங்களில் கடைகளை திறக்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு 1,895 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரேநாளில் 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்களுக்கு கரோனா

மும்பையில் டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: உயிரிழப்பு 11 ஆக உயர்வு

கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு (ஏப்.11) உயிரிழந்தார். விரிவான செய்திக்கு...

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 8,356 ஆக உயர்வு

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,529-இல் இருந்து 8,356 அதிகரித்துள்ளது என்றும், உயிரிழந்தோா் எண்ணிக்கை 273 -ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு...

வேலூரில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா: பாதிப்பு 12 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.விரிவான செய்திக்கு...

உலகம் முழுவதும் கரோனாவால் 1,08,854 பேர் பலி: பாதிப்பு 17,81,053 ஆக உயர்வு

கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1 லட்சத்து 8 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் 17 லட்சத்து 81 ஆயிரத்து 53க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு...

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 2,299; பலி 8 ஆக உயர்வு

 சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 90 வயதுடைய முதியவர் ஒருவர் நோய்த்தொற்றால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...

அமெரிக்காவில் கரோனாவுக்கு 40 இந்தியா்கள் பலி

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) பாதிக்கப்பட்ட இந்தியா்கள், இந்திய வம்சாவளியினா் 40 போ் உயிரிழந்தனா். விரிவான செய்திக்கு...

டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்களுக்கு கரோனா

மும்பையில் டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு..

அசாதாரண சூழலில் அதிகரிக்கும் மன அழுத்தங்கள்!

பொது ஊரடங்கால் வீட்டுக்குள்ளே அடங்கியிருப்பது, மதுபான பிரியா்களுக்கு அவை முற்றாகக் கிடைக்காமல் இருப்பது போன்ற காரணிகளால் மன அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த அழுத்தங்கள் சில தற்கொலைகளுக்கும் வித்திட்டு வருகின்றன. விரிவான செய்திக்கு...

ராஜஸ்தானில் ஒரேநாளில் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ராஜஸ்தானில் மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 751 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

குஜராத்தில் புதிதாக 25 பேருக்கு கரோனா உறுதி; பாதிப்பு 493 ஆக உயர்வு!

குஜராத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: சென்னையில் 84 வயது மூதாட்டிஉள்பட 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 84 வயது மூதாட்டி உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் சிகிச்சையில் குணமடைந்ததால் வீடு திரும்பினா். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி: உயிரிழப்பு 11 ஆக உயர்வு

கரோனா நோய்த்தொற்றுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு (ஏப்.11) உயிரிழந்தார்.  விரிவான செய்திக்கு...

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவனைக்கு செல்லுங்க: பீலா ராஜேஷ் வேண்டுகோள்

காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.விரிவான செய்திக்கு...

மாநில முதல்வா்களுடன் முகக்கவசம் அணிந்து பிரதமா் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில், மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி முகத்தில் துணியை முகக்கவசம் போல மூடியவாறு இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2,000 பேர் மரணம்

உலகில் கரோனா நோய்த்தொற்றுக்கு (கொவைட்-19) முதல் முறையாக அமெரிக்காவில் ஒரே நாளில் இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வெள்ளிக்கிழமை மட்டும் 2,108 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி பலியாகினர். விரிவான செய்திக்கு..

தனது காரையே வீடாக மாற்றி 5 நாள்கள் தங்கியிருந்த அரசு மருத்துவர்: எதற்காகத் தெரியுமா?

போபால்: தனது வீட்டு வாசலில் சாலையோரமாக தனது காரை நிறுத்திவிட்டு, அதிலேயே சுமார் 5 நாட்களுக்கும் தங்கியிருந்தார் அரசு மருத்துவர். அவரது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் பொருட்டு அவர் இப்படி செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு ..

தனது காரையே வீடாக மாற்றி 5 நாள்கள் தங்கியிருந்த அரசு மருத்துவர்: எதற்காகத் தெரியுமா?

போபால்: தனது வீட்டு வாசலில் சாலையோரமாக தனது காரை நிறுத்திவிட்டு, அதிலேயே சுமார் 5 நாட்களுக்கும் தங்கியிருந்தார் அரசு மருத்துவர். அவரது குடும்பத்தினரைப் பாதுகாக்கும் பொருட்டு அவர் இப்படி செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் 969 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் மொத்தம் 969 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் கரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது

கன்னூர்: கேரள மாநிலத்தில கரோனா பாதித்த கர்ப்பிணி அறுவை சிகிச்சை மூலம் இன்று ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். விரிவான செய்திக்கு.. 

சென்னையில் வீடுதோறும் சென்று மருத்துவப் பரிசோதனை 90% நிறைவு

சென்னையில் வீடு தோறும் சென்று பொதுமக்களின் உடல்நல மதிப்பாய்வு செய்யும் பணி 90% முழுமை அடைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை சென்னையில் உள்ள 51,31,314 வீடுகளில் வசிக்கும் 86 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கரோனா அபாயம் இருக்கும் 10 இடங்களுக்கு சீல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட 10 இடங்களுக்கு சீல் வைத்திருக்கும் மாநில நிர்வாகம், இங்கு அடுத்த 14 நாட்களுக்கு இந்த உத்தரவு நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..

உத்தரப்பிரதேசம்: 5 நாட்களில் 50 தனி வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்

லக்னௌ: கரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் 5 நாட்களில் ரயில் பெட்டிகளை 50 தனி வார்டுகளாக மாற்றி வடகிழக்கு ரயில்வே சாதனை படைத்துள்ளது.வரிவான செய்திக்கு...

ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் மாநில முதல்வர்கள் கோரிக்கை

புது தில்லி: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் மாநில முதல்வர்கள்  வலியுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு..

கரோனா வைரஸ் என்னை மெதுவாகத் தின்றுவருகின்றது: பிரான்ஸிலிருந்து ஒரு தமிழ்க் குரல்

(பிரான்ஸில் வசிக்கும் ஈழத் தமிழர் இரயாகரன். தற்போது கரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டு வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் மனைவியும் பாதிக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன் இணையவெளியில் அவர் எழுதியுள்ள பின்வரும் குறிப்பு, கரோனா பாதித்த பிரான்ஸில் தற்போதுள்ள சூழ்நிலை பற்றி நேரடி சாட்சியமாகத் தெளிவாக விவரிக்கிறது.) விரிவான செய்திக்கு.. 

சென்னையில் கரோனா பாதித்த 84 வயது மூதாட்டி குணமடைந்தார்

சென்னை: சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து வீடு இன்று மதியம் திரும்பினார்.

இவருடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்கள் பூரண குணம் அடைந்தனர். அவர்களுக்கு இரண்டு முறை கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நோய் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மூன்று பேரும் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார்கள்.

விரைவில் சென்னையிலும் வண்ண பாஸ்கள்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி பொதுமக்கள் தினமும் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் சென்னையிலும் விரைவில் வண்ண பாஸ்கள் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு.. 

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

கரோனா பரவல் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 19 மருத்துவ நிபுணர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விரிவான செய்திக்கு..

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு 365 ஆக அதிகரிப்பு

ஆந்திராவில் நேற்று இரவு முதல் மேலும் இரண்டு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலமாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை இப்போது 365 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்துக்கு நல்ல செய்தி: ஒரே நாளில் 22 நோயாளிகள் குணமடைந்தனர்

நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்டிருக்கும் மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிரத்துக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக இன்று ஒரே நாளில் 22 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 6,412 ஆக அதிகரிப்பு; பலி 199

புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,412-ஆக அதிகரித்தது. அந்த நோய்த்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 169 இல் இருந்து 199 ஆக உயா்ந்தது. விரிவான செய்திக்கு..

உலக அளவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தைத் தாண்டியது

பாரீஸ்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 16 லட்சத்தைத் தாண்டியது. மேலும், அந்த நோய் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்கியது. விரிவான செய்திக்கு.. 

கரோனா பலி எண்ணிக்கை 96 ஆயிரத்தை நெருங்குகிறது

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 96 ஆயிரத்தை நெருங்கியது. நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைத் தாண்டியது. விரிவான செய்திக்கு.. 

கரோனா பரவலில் தமிழகம் 3-வது நிலைக்குச் செல்ல வாய்ப்பு: முதல்வா் பழனிசாமி தகவல்

சென்னை: கரோனா நோய்த் தொற்றில் தமிழகம் மூன்றாவது நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விரிவான செய்திக்கு.. 

உலகளவில் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி தற்போது உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. அந்த நோய்த்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம் பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை தாண்டியது.

காஷ்மீரில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 207ஆக உயர்வு

காஷ்மீரில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 207ஆக உயர்ந்துள்ளது. அதில் 39 பேர் ஜம்முவிலும், 168 பேர் காஷ்மீரிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீரின் முதன்மைச் செயலாளர் ரோகித் கன்சால் தெரிவித்துள்ளார். அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 6,412 பாதிக்கப்பட்டுள்ளனர். 

கோவையில் இன்று ஒரேநாளில் 26 பேருக்கு கரோனா; மாவட்ட வாரியாக நிலவரம்!

கோவையில் இன்று ஒரேநாளில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: இந்தியாவில் பலி 200- ஐத் தாண்டியது; பாதிப்பு 6,761 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,761 ஆகவும் பலி எண்ணிக்கை 206 ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: தூத்துக்குடியில் பெண் பலி

தூத்துக்குடியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா; பாதிப்பு 911 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தெருவோர நாய்களுக்கு உணவளியுங்கள்: எடியூரப்பா கோரிக்கை

பெங்களூரு: பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் வசிக்கும் தெரு நாய்களுக்கு குடிநீர் மற்றும் உணவளிக்குமாறு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

பஞ்சாப்பில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டது: முதல்வர் அமரீந்தர் சிங்

சண்டீகர்: பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறிவிட்டதாகவும், இது மிகப்பெரிய பேராபத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும் என்றும் அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எப்படி இருக்க வேண்டும்? தமிழக அரசு அறிவுரை

கரோனா அறிகுறி அல்லது கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களும், குடும்பத்தினரும் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னை: மருத்துவமனையிலேயே தங்கும் கரோனா பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியிருக்கிறார்கள். விரிவான செய்திக்கு.. 

ஊரடங்கு காலத்தில் ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது: மத்திய அரசு

ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டத்தில் எந்த விழாக்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. விரிவான செய்திக்கு..

கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 678 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் 1.68 கோடி பேர் வேலையிழந்தனர்!

கரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் கடந்த மூன்று வாரங்களில் ஒரு கோடியே 68 லட்சம் பேர் வேலைகளை இழந்துவிட்டனர்.

இதனிடையே, புனித வெள்ளி, ஈஸ்டர் திருநாள்களை வீட்டிலிருந்தபடியே கடைப்பிடிக்கும்படி மதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நியு யார்க்கில் சடலங்களை ஒரே இடத்தில் மொத்தமாகப் புதைக்கும் அவலம்

அமெரிக்காவில் நியு யார்க் நகரில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் சடலங்களை ஒரே இடத்தில் பெரும் பள்ளம் வெட்டி அடுக்கடுக்காகப் புதைக்கிறார்கள். விரிவான செய்திக்கு..

கடந்த 17 நாட்களில் இதுதான் குறைவு: ஸ்பெயினில் ஒரேநாளில் 605 பேர் பலி

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை கடந்த 17 நாட்களில் இல்லாத அளவுக்கு இன்று குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் கரோனா அறிகுறிகளுடன் 661 பேர்!

சென்னையில் வீடு வீடாக நடத்தப்பட்ட சோதனையில் கரோனா அறிகுறியுடன் உள்ள 661 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

போரிஸுக்கு வந்ததன் மூலம் கரோனாவின் தீவிரம் உணர்த்தப்பட்டுள்ளது: தந்தை ஸ்டான்லி

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வந்ததன் மூலம் கரோனா நோய்த் தொற்று எந்த அளவுக்கு மோசமானது என்பது உணர்த்தப்பட்டுள்ளதாக போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கர்நாடகத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா உறுதி; பாதிப்பு 207 ஆக உயர்வு

கர்நாடகத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 207 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

'ரயில்களை இயக்குவது பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை'

ஊரடங்கிற்குப் பிறகு - ஏப். 15 ஆம் தேதியிலிருந்து ரயில்களை இயக்குவது பற்றி இதுவரையில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படாத நிலையில் ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது ஊகங்களை அதிகரிக்கவே உதவும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? -முதல்வர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. விரிவான செய்திக்கு..

பஞ்சாபில் உயிரிழந்த பெண்ணிற்கு கரோனா பாதிப்பு

பஞ்சாபில் 78 வயது பெண் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. விரிவான செய்திக்கு..

தப்பிப் பிழைப்பார்களா, குடிசைப் பகுதி மக்கள்? உலகம் முழுவதும் நூறு கோடி பேர்!

கரோனா நோய்த் தொற்றின் வேகத்திலிருந்து உலகிலுள்ள எண்ணற்ற குடிசைப் பகுதிகளின் மக்கள் தப்பிப் பிழைப்பார்களா? உலகின் மிகப் பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றான மும்பை  தாராவியில் மூன்றாவதாக ஒரு பெண் உயிரிழந்திருக்கிறார். தாராவியில் பரவும் கரோனோ நோய்த் தொற்று பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com