பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...

சென்னையில் நடமாடும் அங்காடி திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் கவனத்துக்கு..

சென்னை மாநகராட்சியின் நடமாடும் அங்காடி திட்டத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது வணிகர்கள் அதற்கான அனுமதி சீட்டுக்காக விண்ணப்பிக்க மண்டல அலுவலகங்களை அனுகலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 156 பேருக்கு கரோனா: ராயபுரத்தில் மட்டும் 43 பேர்

 சென்னை: சென்னையில் வியாழக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 156 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு 149 ஆக இருந்தது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி

 நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை காலை நிலவரப்படி 1,297 ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

ஜார்க்கண்டில் கரோனாவுக்கு முதல் பலி; இந்தியாவில் பாதிப்பு 6 ஆயிரத்தை எட்டுகிறது

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 540 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 5,916 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 166 ஆக உள்ளது. இதுவரை 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். விரிவான செய்திக்கு..

புகைப்படம் சொல்லும் செய்தி..

அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம்: மோடி டிவீட்

புது தில்லி: கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு.. 

கரோனா விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கரோனா விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம், அவ்வாறு செய்தால் அது நெருப்புடன் விளையாடுவது போன்றது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸும் கூறியுள்ளார். விரிவான செய்திக்கு.. 

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது

 உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அந்த வைரஸுக்கு இதுவரை 1,541,113 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 90,055 பலியாகியுள்ளனர். 

பிரிட்டனில் ஆச்சரியம்: கரோனாவில் இருந்து மீண்ட 98 வயது இந்திய வம்சாவளி பெண்

 லண்டன்: மருத்துவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 98 வயது இந்திய வம்சாவளிப் பெண் சிகிச்சையின் காரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். விரிவான செய்திக்கு..

ஈரோட்டில் ஒரேநாளில் 26 பேருக்கு கரோனா; மாவட்ட வாரியாக நிலவரம்

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 163 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,865 ஆக உயர்வு: மத்திய சுகாதாரத் துறை தகவல்

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,865 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கரோனா; பாதிப்பு 834 ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 96 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

கரோனா குறித்த சந்தேகங்களுக்கு ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவை!

கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு பெற ஐ.வி.ஆர்.எஸ். தானியங்கி குரல் வழி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் இணைந்து தொடங்கி வைத்தனர். விரிவான செய்திக்கு..

உலகம் முழுவதும் கரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியது!

கரோனா நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தற்போது பலி எண்ணிக்கை 89,427 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

1.30 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை, 5,734 பேருக்கு உறுதி

இந்தியாவில் இதுவரை 1.30 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்களில் 5,734 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில் இது 3 முதல் 5 சதவிகிதம்தான் என்றும் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தெரிவித்துள்ளது.

ரயில் பெட்டிகளில் 80 ஆயிரம் படுக்கைகள்!

கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக ரயில் பெட்டிகளில் 80 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

இதற்காக 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை மாற்றத் திட்டமிட்டு, இதுவரையில் 3,250 பெட்டிகள், வார்டுகளைப் போல மாற்றப்பட்டு விட்டதாகவும் நல்வாழ்வுத் துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மும்பையில் பெண் பலி

மும்பை தாராவி பகுதியில் கரோனா நோய்த் தொற்று பாதித்த ஒரு பெண் உயிரிழந்தார்.

70 வயதான இவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாகவும் மும்பை மாநகராட்சி நிர்வாகத்தை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 549 பேருக்கு கரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத் துறை

 நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 549 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

படுக்கையில் எழுந்து அமர்ந்தார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் கரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், படுக்கையில் எழுந்து அமர்ந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - முதல்வர் பதில்

நோயின் தாக்கத்தைப் பொறுத்தே தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

துரித ஆய்வு உபகரணங்கள் 4 லட்சம் பெற கொள்முதல் ஆணை பிறப்பிப்பு: முதல்வர் தகவல்

தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், துரித ஆய்வு உபகரணங்கள் 4 லட்சம்  பெறுவதற்கு கொள்முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார். விரிவான செய்திக்கு..

படுக்கையில் எழுந்து அமர்ந்தார் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் கரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், படுக்கையில் எழுந்து அமர்ந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விரிவான செய்திக்கு..

கரோனா: குஜராத்தில் மேலும் ஒருவர் பலி; பாதிப்பு 241 ஆக அதிகரிப்பு

குஜராத்தில் கரோனா தொற்றுக்கு 48 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து அங்கு கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தெலங்கானாவில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு

தெலங்கானாவில் புதிதாக 49 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

சீனாவில் இரண்டாவது கரோனா அலை? 1000 பேருக்கு கரோனா பாதிப்பு

கரோனாவின் தோற்றுவாயான சீனாவில், கடந்த சில தினங்களாக அந்த நோய்த்தொற்றின் தாக்கம் சற்று தணிந்து காணப்பட்ட நிலையில், புதிதாக 63 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 61 பேர் வெளிநாடுளில் இருந்து வந்தவா்கள். விரிவான செய்திக்கு..

சென்னையில் 149 பேருக்கு கரோனா: எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர்?

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை 11 மணி நிலவரப்படி 149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

திருவான்மியூர் சந்தைப் பகுதியில்..

துபை: தொற்று பாதித்தவர்களுக்கு முன்னின்று உதவிய இந்திய சமூக ஆர்வலருக்கு கரோனா

 துபை: சவூதி அரேபியாவில் சமூக நலப் பணிகளை முன்னின்று நடத்தி வந்த கேரளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நஸீர் வாடனப்பள்ளிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு.. 

கரோனாவின் கோரப்பிடியில் ஈகுவேடார்: சாலைகளில் வீசப்படும் உடல்கள்

குவிட்டோ: கரோனா எனும் தொற்றின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் ஏழை நாடுகளில் ஒன்று ஈகுவேடார். இங்கு சுமார் 4 ஆயிரம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது. 220 பேர் கரோனா பாதித்து மரணம் அடைந்துள்ளனர். விரிவான செய்திக்கு.. 

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 773 பேருக்கு கரோனா பாதிப்பு

 புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனா பாதிப்பு 5,194 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழப்பு 149 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டியது

 இந்தியாவில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது 1,078 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 44 பேர் பிரிஹன்மும்பை மாநகராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். 9 பேர் புணேவையும், 4 பேர் நாக்பூரையும், ஆகமத்நகரைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர். விரிவான செய்திக்கு.. 

வேலூரில் ஒருவர் பலி: தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்வு

கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 8ஆக உயர்ந்தது. விரிவான செய்திக்கு..

அடுத்த 7 நாள்கள் மிகவும் முக்கியமானவை: வெங்கய்ய நாயுடு

‘ஊரடங்கை தளா்த்துவதற்கான திட்டத்தை வகுப்பதில், அடுத்த 7 நாள்கள் மிகவும் முக்கியமானவை; இந்த காலகட்டத்தில் கரோனா பரவல் எப்படி உள்ளது என்பதை பொறுத்தே, அரசின் முடிவு அமையும்’ என்று துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா். விரிவான செய்திக்கு.. 

தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் மருத்துவப் பணியாற்றிய ஆண் செவிலியா்

 தாயாா் உயிரிழந்த நிலையிலும், அவரது இறுதிச் சடங்கில் கூட பங்கேற்காமல் தொடா்ந்து மருத்துவப் பணியாற்றிய ஆண் செவிலியரின் கடமை உணா்வு நெகிழ்வை ஏற்படுத்தியது. விரிவான செய்திக்கு..

கரோனாவை விரட்ட 6 வழிமுறைகள்: இந்தியாவில் செயல்பாடு எப்படி?

உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்றை பத்து வாரங்களில் 6 விதமான நடைமுறைகளைப் பின்பற்றினாலே விரட்டியடிக்க முடியும் என்கிறாா் அமெரிக்காவைச் சோ்ந்த மருத்துவா் ஹாா்வி வி. ஃபைன்பா்க். இது தொடா்பாக ‘நியூ இங்கிலாந்து’ மருத்துவ சஞ்சிகையில் அவா் தலையங்கமும் எழுதியுள்ளாா். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இதுவெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..


உலகம் முழுவதும் 85 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 85 ஆயிரத்தைத் தாண்டியது.விரிவான செய்திக்கு..

 

வேலூரில் மூன்று நாட்கள் மட்டுமே கடைகள் இயங்கும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே கடைகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா; பாதிப்பு 738 ஆக உயர்வு!

தமிழகத்தில் புதிதாக 48 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய நல்வாழ்வுத் துறை

 புது தில்லி: இந்தியாவில் தற்போது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடு இல்லை, எதிர்காலத்திலும் தட்டுப்பாடு ஏற்படாது என்று மத்திய நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு..

மும்பையில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாநகராட்சி உத்தரவு

 மும்பை: மும்பையில் கரோனா பாதிப்பு சமூகத் தொற்றாக மாறியிருக்கும் நிலையில், பொதுவிடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  விரிவான செய்திக்கு..

ஜெர்மனியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது

 பெர்லின்: ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஜெர்மனியில் கரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. விரிவான செய்திக்கு..

மும்பையில் சமூகத் தொற்றாக மாறிய கரோனா: மாநகராட்சி தகவல்

 மும்பை: மும்பையில் இதுவரை உள்வட்டப் பரவலாக இருந்த கரோனா தொற்று தற்போது சமூகத் தொற்றாக மாறியிருப்பதாக பிரிஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

கடந்த 24 மணி நேரத்தில் 773 பேருக்கு கரோனா பாதிப்பு: மத்திய அரசு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 773 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (புதன்கிழமை) தெரிவித்தது. விரிவான செய்திக்கு..

உ.பி.யில் 15 மாவட்டங்களுக்கு சீல் வைக்க முடிவு!

கரோனா பரவல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் 15 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை சீல் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

ஸ்பெயினில் தொடர்ந்து 2-வது நாளாக பலி எண்ணிக்கை உயர்வு: 24 மணி நேரத்தில் 757 பேர் பலி

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் (புதன்கிழமை) உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை: பிரதமர் மோடி

கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.80 கோடி: முதல்வர் நன்றி

கரோனா வைரஸ் நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.80 கோடி பெறப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

 

டிரோன்களைப் பயன்படுத்தும் கேரள காவல்துறை

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும்: பிரதமரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..

போலீஸாருக்கு ரூ.50 லட்சம் காப்பீடு: உ.பி. அரசு அறிவிப்பு

உத்தரப்பிரதேச போலீஸாருக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனா தடுப்பு நடவடிக்கை குழுக்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்ட 12 குழுக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். விரிவான செய்திக்கு..

தில்லியில் கரோனா பாதிப்பு 576 ஆக உயர்வு; தீவிர சிகிச்சைப் பிரிவில் 35 பேர்!

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரிவான செய்திக்கு.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com