அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...
அச்சுறுத்தும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா நோய்த் தொற்று தொடர்பான செய்திகள் - உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்...  - லைவ் அப்டேட்ஸ்

உலக அளவில் கரோனா பலி 82 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை  82 ஆயிரத்து 74 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 லட்சத்து 31 ஆயிரத்து 689 ஆக உயர்ந்துள்ளது.  விரிவான செய்திக்கு...

கரோனா பலி: பிரான்சில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு பிரான்சில் பலியானவா்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 328 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 9 ஆயிரத்து 69 ஆக உயர்ந்துள்ளது.  விரிவான செய்திக்கு...

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 4,789; பலி 124

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,789-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 508 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கையும் 124-ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு...

ஒரு கரோனா நோயாளியால் 30 நாள்களில் 406 பேருக்கு நோய்த் தொற்று ஏற்படும்: ஐசிஎம்ஆா் ஆய்வுத் தகவல்

தேசிய ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தாவிட்டால், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியால் 30 நாள்களில் 406 பேருக்கு அந்த நோய் பரவும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது. விரிவான செய்திக்கு...

வேலூரில் ஒருவர் பலி: தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு 8 ஆக உயர்வு

கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 8ஆக உயர்ந்தது. விரிவான செய்திக்கு...

கரோனாவை விரட்ட 6 வழிமுறைகள்: இந்தியாவில் செயல்பாடு எப்படி?

உலகையே உலுக்கி வரும் கரோனா தொற்றை பத்து வாரங்களில் 6 விதமான நடைமுறைகளைப் பின்பற்றினாலே விரட்டியடிக்க முடியும் என்கிறாா் அமெரிக்காவைச் சோ்ந்த மருத்துவா் ஹாா்வி வி. ஃபைன்பா்க். இது தொடா்பாக ‘நியூ இங்கிலாந்து’ மருத்துவ சஞ்சிகையில் அவா் தலையங்கமும் எழுதியுள்ளாா். கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இதுவெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு...

தில்லி புற்றுநோய் மருத்துவமனை மூடப்பட்டது!

புது தில்லியிலுள்ள தில்லி புற்றுநோய் மருத்துவமனை மூடப்பட்டது.

மருத்துவமனைப் பணியாளர்களில் 18 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையை மூடும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் முகக் கவசம் கட்டாயம்!

ஒடிசாவில் வரும் 9 ஆம் தேதி முதல் முகக் கவசம் கட்டாயம் என மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா: இந்தியாவில் பாதிப்பு 4,421; பலி எண்ணிக்கை 114 ஆனது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,421-ஆக அதிகரித்துள்ளது. இதில், ஒரே நாளில் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 114-ஆக உயா்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

மனித நேய அடிப்படையில் உலக நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து தர இந்தியா முடிவு

புது தில்லி: கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

வீட்டுக்கு வரக்கூடாது: மருத்துவர்களுக்கு ஏற்படும் மற்றொரு நெருக்கடி

சூரத்: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால், தனக்கும் கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அதனால் தான் வீட்டுக்கு வரக் கூடாது என்று அக்கம் பக்கத்தினர் மிரட்டுவதாகவும் குஜராத்தைச் சேர்ந்த மருத்துவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விரிவான செய்திக்கு..

பிரிட்டனில் ஒரே நாளில் 786 பேர் பலி: 6 ஆயிரத்தைத் தாண்டியது எண்ணிக்கை

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 786 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் 11 ஆயிரத்தைத் தாண்டியது பலி

அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து 11,013 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் ஆயிரத்தைத் தாண்டியது பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து 1,018 ஆக உள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை மீண்டும் உயர்வு: ஒரே நாளில் 743 பேர் பலி

ஸ்பெயினில் கடந்த 4 நாள்களாக குறைந்து வந்த பலி எண்ணிக்கை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

என்95 முகக்கவசத்தை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம்: தில்லி எய்ம்ஸ்

புது தில்லி: என்95 ரக முகக்கவசங்களை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தப்படுத்திவிட்டு, மீண்டும் பயன்படுத்தலாம் என்று மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு தில்லி எய்ம்ஸ் அறிவுறுத்தியுள்ளது.விரிவான செய்திக்கு...

சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த செய்தி உண்மையல்ல: சென்னை மாநகராட்சி

சென்னை: கரோனாவை ஒழிக்க ஊரடங்கு நடைமுறையை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாகப் பரவியது.விரிவான செய்திக்கு...

ஒடிஸாவில் ஏப்ரல் 9-ம் தேதி முதல் வெளியே வருவோருக்கு முகக்கவசம் கட்டாயம்

புவனேஸ்வர்: கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை கட்டாயமாக்கியிருக்கும் முதல் மாநிலமாக மாறியிருக்கிறது ஒடிஸா.விரிவான செய்திக்கு...

ஒரு கரோனா நோயாளி மூலம் 406 பேருக்கு தொற்றுப் பரவலாம்: மத்திய நல்வாழ்வுத் துறை

புது தில்லி: இந்தியாவில் செவ்வாய்க்கிழமை மாலை வரை 4,421 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு...

கரோனா தடுப்புப் பணிக்கு நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித் ரூ. 1.25 கோடி நிதியுதவி அளித்துள்ளார். பிரதமர் நல நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். விரிவான செய்திக்கு..

ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்?

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

கடும் மூச்சுத் திணறல்: போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. விரிவான செய்திக்கு..

குஜராத்தில் கரோனா பாதிப்பு 165ஆக உயர்வு

குஜராத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று மட்டும் புதிதாக மேலும் 19 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி அகமதாபாத் 13, படன் 3, பாவ்நகர், ஆனந்த் மற்றும் சபர்கந்தாவில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒரே நேரத்தில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

ஊரடங்கு உள்ளிட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஒரே நேரத்தில் தளர்த்த வேண்டாம், படிப்படியாக தளர்த்துவது குறித்து சிந்திக்குமாறு உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் பேரிடர் காலப் பிரிவு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.விரிவான செய்திக்கு...

உலக அளவில் கரோனா பாதிப்பு 13 லட்சத்தை எட்டியது

உலக அளவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கரோனா பாதித்தோர் எண்ணக்கை 13 லட்சத்து 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 700 ஆக உள்ளது.விரிவான செய்திக்கு...

தமிழக விவசாயிகளுக்கு உதவிட அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை: காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் மற்றும் வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத சந்தைக் கட்டணத்துக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு...

ரஷ்யாவில் முதல்முறையாக ஒருநாளில் அதிக பாதிப்பு

ஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,497 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

குஜராத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி

குஜராத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

ஊரடங்கை மீறி பல கிலோமீட்டர் தூரம் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..

சென்னையில் 43 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக 43 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார். விரிவான செய்திக்கு ..

ராஜஸ்தானில் கரோனா பாதித்தவர் பலி; மொத்த பாதிப்பு 274

 உராஜஸ்தானில் கரோனா பாதித்த 60 வயது நபர் பலியான நிலையில், அந்த மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

நல்ல நாட்கள் மீண்டும் வரும்: ராணி எலிசபெத் உரை

லண்டன்: கரோனா தொற்றினால்,  உலகப் போருக்கு நிகரான சூழ்நிலையை நாடு எதிர்கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டன் ராணி எலிசபெத், நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக தனது உரையை நிகழ்த்தினார். விரிவான செய்திக்கு.. 

கோவையில் 5 பேர் குணமடைந்தனர்: ஆட்சியர் கு. ராசாமணி

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கல்லூரி மாணவி உள்பட 5 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்தார். விரிவான செய்திக்கு..

கரோனா: மகாராஷ்டிரத்தில் 7 பேர் பலி

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரத்தில் திங்கள்கிழமை மட்டும் 7 பேர் பலியாகியுள்ளனர். விரிவான செய்திக்கு..

சென்னையில் 100-ஐத் தாண்டியது பாதிப்பு: தமிழகத்தின் இன்றைய முழு நிலவரம்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..

ஸ்பெயின் பலி எண்ணிக்கை: தொடர்ந்து 4-வது நாளாக குறைவு

ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒருநாளைக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 4-வது நாளாக குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

வரலாற்றில் வைரஸ்...

நோய் காரணமாக மனிதா்களை ஆயிரக்கணக்கில் - ஏன் லட்சக்கணக்கிலேயே என பலியான ஏராளமான சம்பவங்கள் இதற்கு முன்பும் சரித்திரத்தில் உண்டு. ரோம் சாம்ராஜ்யத்தில், விரிவான செய்திக்கு..

அமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா தொற்று உறுதி

 அமெரிக்காவில் 4 வயது புலிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது. விரிவான செய்திக்கு.. 

கரோனா: அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1200 பேர் பலி

 அமெரிக்காவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1200 பலியாகியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் 4,067 பேருக்கு கரோனா தொற்று உறுதி

 இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி, புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதி: பீலா ராஜேஷ்

தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தில்லியில் ஒவ்வொருவருக்கும் 4 கிலோ கோதுமை, 1 கிலோ அரிசி!

தில்லியில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 கிலோ கோதுமை, 1 அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

தில்லியிலுள்ள 421 அரசுப் பள்ளிகளில் நாளை முதல் இவை வழங்கப்படும் என்றும் இதன் மூலம் 10 லட்சம் பேர் பயன்பெறுவார்கள் என்றும் தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கூடுதல் தானியங்களைக் கேட்டுப் பெறுவோம் என்றும் கேஜரிவால் தெரிவித்தார்.

கரோனா பாதித்த 3-ல் ஒரு பங்கினர் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்: சென்னையும் ஒன்று

புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்த மூன்றில் ஒரு பங்கினர் வெறும் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.விரிவான செய்திக்கு...

கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மத்திய சுகாதாரத் துறை

கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உலகத் தலைவா்களில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸனுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது...விரிவான செய்திக்கு... 

கரோனா பாதித்தவர்களில் 63% பேர் ஆண்களே: மகாராஷ்டிர அரசு தகவல்

புது தில்லி: இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்களே அதிகமாக இருப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது.விரிவான செய்திக்கு...

இருமல், காய்ச்சல் ஏற்பட்டதால் உத்தரப்பிரதேச இளைஞர் தற்கொலை

பான்டா: உத்தரப்பிரதேச மாநிலம் ஜமால்புர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நபர், இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் கரோனா அச்சம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.விரிவான செய்திக்கு...

கேரளாவில் முதல் முறையாக நடமாடும் கரோனா பரிசோதனை மையம் அமைப்பு

கொச்சி: கேரளாவில் கரோனா பரிசோதனை செய்யும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன பாதுகாப்பு அறையை எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நிர்மாணித்துள்ளது.விரிவான செய்திக்கு...

எம்.பி.க்களின் ஓராண்டு ஊதியத்தில் 30% பிடித்தம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

புது தில்லி: கரோனா தொற்று காரணமாக தமிழகம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.விரிவான செய்திக்கு...

உலகளவில் கரோனா பலி 70 ஆயிரத்தை தாண்டியது

 உலகளவில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக இத்தாலி 15,887, ஸ்பெயின்  13,055, அமெரிக்கா 9,620, பிரான்ஸ் 8,078, பிரிட்டன் 4,934, ஈரான் 3,603, சீனா 3,329 பேர் பலியாகினர். அதேசமயம் உலகளவில் கரோனாவுக்கு 12,82,040 பேர் பாதித்துள்ள நிலையில் 269,451 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்கா 3,36,851, ஸ்பெயின் 1,35,032, இத்தாலி 1,28,948 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா பாதிப்பில் நாட்டில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 86 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று நிலவரப்படி 485 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் 33 பேருக்கு கரோனா: புதிய உச்சம் தொட்டது மகாராஷ்டிரம்

மும்பை: இந்தியாவில் கரோனா பாதிப்பில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று மேலும் 33 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது.

புணேவில் 19 பேருக்கும், மும்பையில் 11 பேருக்கும், சதாராவில் ஒருவருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று: பிகாரில் இருந்து ஒரு நல்ல செய்தி

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, இந்தியாவில் முதல் முறையாக பிகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும்.. விரிவான செய்திக்கு.. 

இது ஒரு நீண்ட போராக இருக்கலாம்: பிரதமர் மோடி பேச்சு

புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி, அதனை தடுப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். விரிவான செய்திக்கு..

கரோனாவால் உயிரிழப்பு நேரிட்டாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்: ஆயுள் காப்பீட்டு கழகம்

கரோனா பாதித்து உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதை அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆயுள் காப்பீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

கரோனாவிலிருந்து மீண்டார் பாடகி கனிகா கபூர்: வீடு திரும்பினார்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகி கனிகா கபூர் தற்போது குணமாகியுள்ளார். இதனால் சிகிச்சை முடிந்து மருத்துவனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். விரிவான செய்திக்கு.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com