பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியது.
பரவும் கரோனா: லைவ் அப்டேட்ஸ்

எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியது.

கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன. 

கரோனா தொடர்பான செய்திகள் இங்கேகரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்.
 

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40 ஆக உயா்வு

 தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் அந்த கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

வேலூர் மாவட்டத்தில் முதன்முதலாக ஒருவருக்கு கரோனா உறுதி

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலாக கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரிவான செய்திக்கு...

கமல்ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டாரா?

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சி அறிவித்தாக நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. விரிவான செய்திக்கு...

பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் அமெரிக்காவில் கரோனாவுக்கு பலி

 அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு (கொவைட்-19) பிரபல இந்திய சமையல்கலை நிபுணர் அமெரிக்காவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். விரிவான செய்திக்கு...

இஎம்ஐ செலுத்த 3 மாதங்கள் அவகாசம்: மக்களுக்கு எப்படி பலனளிக்கும்?

 மும்பை: தனிநபர் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன் நிலுவைக்கான தவணைகளை 3 மாதங்களுக்கு வசூலிக்காமல் தள்ளிவைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கை கடுமையாக பின்பற்றுக: முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி அறிவுரை

 சென்னை: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 38ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் இங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது நபர், சேலத்தை சேர்ந்த 61 வயது முதியவர் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா: இந்தியாவில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 727 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு...

சிபிஎஸ்இ பிளஸ் 2 பாடநூலில் கரோனா நோய்த்தொற்று தகவல்கள்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா நோய்த்தொற்று குறித்த அடிப்படைத் தகவல்கள் சிபிஎஸ்இ பிளஸ் 2 பாடநூலில் இடம்பெற்றுள்ளன.  விரிவான செய்திக்கு...

தமிழகத்தில் 86 ஆயிரம் பேரை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து மாநிலத்தில் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டியவா்கள் என 86,644 போ் அடங்கிய பட்டியலை குடியேற்றத் துறை வழங்கியிருக்கிறது.  விரிவான செய்திக்கு...

கரோனா: ‘வெப்பப் பகுதிகளில் மெதுவாகப் பரவும்’

 வெப்பமான, ஈரப்பதம் மிக்க தட்பவெப்பத்தில் கரோனா நோய்க்கிருமி வழக்கத்தைவிட குறைவான வேகத்தில் பரவும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. விரிவான செய்திக்கு...

கரோனா நோய்த்தொற்று: உலக அளவில் முதல் இடத்தை பிடித்தது அமெரிக்கா

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நோய்த் தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 83,672 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து சீனா மற்று இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடைத்தை பிடித்துள்ளது.  விரிவான செய்திக்கு...
 

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம்

 கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 85,268 ஆக உள்ளது.

ஓய்வூதியர்கள் இருப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க செப். இறுதி வரை அவகாசம்

 தமிழக அரசின் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வரும் செப்டம்பர் இறுதி வரையிலும் தங்களுடைய இருப்புச் (வாழ்வுச்) சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

உ.பி.யில் ஒரு லட்சம் பேருக்கு உணவு சமைக்கும் சமுதாயக் கூடங்கள் துவக்கம்

 லக்னௌ: ஊரடங்கு நடவடிக்கையால் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்காக உணவு சமைக்கும் சமுதாயக் கூடங்களை உத்தரப்பிரதேச அரசு துவக்கி வைத்துள்ளது.

முதற்கட்டமாக நேற்று தொடங்கிய இந்த திட்டம், வெள்ளிக்கிழமை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கரோனா: பிரிட்டனில் தொண்டர் படையில் 5 லட்சம் பேர்! கைதட்டி மக்கள் பாராட்டு

 பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களுக்கு உதவுவதற்காகத் தேசிய நல்வாழ்வு சேவை (நேஷனல் ஹெல்த் சர்வீஸ்) தொண்டர் படையொன்றை மக்கள் ராணுவம் என்ற பெயரில் அமைத்திருக்கிறது. விரிவான செய்திக்கு..

தஞ்சாவூரில் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 5,000ஐ நெருங்குகிறது

 தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 ஆயிரத்தை நெருங்குகிறது.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை: பழனிசாமி அறிவிப்பு

 சென்னை: கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை பணியமர்த்த சிறப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

மகாராஷ்டிரத்தில் வேகமாகப் பரவும் கரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை நம்பிக்கையூட்டுகிறது

 வியாழக்கிழமை நள்ளிரவு வரை மேலும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மகாராஷ்டிரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125ல் இருந்து 135 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவை எதிர்கொள்ள விழுப்புரத்துக்கு ரூ.1.75 கோடி: அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில், கரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வாங்கவும், மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ரூ.1.75 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

கொசுக்களால் கரோனா பரவுமா? - சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம்

நாடு முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் அதேநேரத்தில் கரோனா குறித்த சில வதந்திகளும் மக்களிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இதில், கொசுக்களினால் கரோனா பரவுமா? என்பது மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..

புதிதாக 6 பேருக்கு கரோனா: தமிழகத்தில் பாதிப்பு 35 ஆக உயர்வு!

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டத்தைச் இருந்த தலா இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று தகவல் தெரிவித்துள்ளது.விரிவான செய்திக்கு..

ஜம்மு காஷ்மீரில் 7 மாதக் குழந்தை, 8 வயது சிறுவனுக்கு கரோனா

ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுவன் மற்றும் 7 மாதக் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா: சமூகப் பரவல் நிலையை இந்தியா எட்டவில்லை

கரோனா பாதிப்பில் இந்தியா இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என சுகாதாரத்துறை இணைச் செயலர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

தமிழகம் முழுவதும் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைக்கும்

தமிழகம் முழுவதும் இயங்கும் ஆவின் பாலகங்களில், தட்டுப்பாடின்றி ஆவின் பால் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின் பால் காலை 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று ஆவின் முகவர்கள் தெரிவித்திருந்த நிலையில், ஆவின் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, காலை முதல் இரவு வரை ஆவின் பாலகங்களில் எந்தத் தட்டுப்பாடும் இன்றி ஆவின் பால் கிடைக்கும். எனவே, பொதுமக்கள் பால் கிடைக்குமா? என்று அஞ்ச வேண்டாம். ஆவின் பால் கிடைக்காது என்ற அச்சத்தால், ஒரே நேரத்தில் ஆவின் பாலகங்களில் குவிவதையும் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை நாளை வழக்கம் போல இயங்கும்

கோயம்பேடு சந்தை நாளையும், நாளை மறுநாளும் வழக்கம் போல இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

இத்தாலியில் பலி எண்ணிக்கை 7,503 ஆக உயர்வு; குணமடைந்தோர் 9,362

இத்தாலி: உலக நாடுகளில் வல்லரசு நாடு என்று அடையாளம் காணப்படும் அமெரிக்காவே, கரோனா பாதிப்பினை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது. விரிவான செய்திக்கு..

கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் பலி: கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவர் மார்ச் 3 ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர், கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் புதன்கிழமை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனாவால் மீண்டும் இணைந்த விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி!

 கரோனா வைரஸ் நிகழ்த்தும் பயங்களுக்கும் ஆச்சர்யங்களுக்கும் அளவே இல்லை. விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி, கரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இணைந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

ஊரடங்கை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். விரிவான செய்திக்கு..

கேரளம்: ஹெச்ஐவி மருந்தால் குணமடைந்த கரோனா நோயாளி!

கேரளத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவா், ஹெச்ஐவி மருந்துகளால் குணமடைந்துள்ளாா். விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 26-ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் கரோனா பாதிப்பு 700-ஐ நெருங்குகிறது

 இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கரோனாவால் மகாராஷ்டிரத்தில் 121 பேரும், கேரளத்தில் 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கரோனாவுக்கு 16 பேர் பலியான நிலையில் 45 பேர் குணமடைந்ததுள்ளனர். 

கரோனா: தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் 29 பேர்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது. லண்டனில் இருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர், 65 வயது பெண் ஆகியோருக்கு கரோனா உறுதியானது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக உள்ளது. 

ஸ்பெயினில் ஒரே நாளில் எட்டாயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 8,578 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு நல்வாழ்வுத் துறை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ஸ்பெயின் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 56,188 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு.. 

கரோனா: நம்பிக்கையூட்டும் வூஹான்

உலக நாடுகள் பலவும் கரோனாவுக்கு எதிராகக் கடும் போரை எதிர்கொண்டு வரும்போது, அதன் பிறப்பிடமான சீனா மீண்டு வருகிறது. விரிவான செய்திக்கு.. 

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு

தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. துபையில் இருந்து திருச்சி வந்த இளைஞருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

அத்தியாவசியப் பொருட்களை வழங்க வெளியே வருவோருக்கு.. அரசின் அறிவுறுத்தல்

அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல வாகனங்களை இயக்குவோரும், வெளியே செல்வோரும் உரிய அடையாள அட்டையை வைத்திருக்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு.. 

மறு உத்தரவு வரும் வரை வட்டி வசூலிக்கத்தடை: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மறுஉத்தரவு வரும் வரை வட்டி வசூலிக்கத் தடை விதித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

ஈரோட்டில் கரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு

 ஈரோட்டில் மூன்று பேருக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும், இதர உத்தரவுகளும் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

ஒடிஸாவில் கரோனா சிகிச்சையளிக்க 2 வாரங்களில் சிறப்பு மருத்துவமனை

கரோனா சிகிச்சையளிக்க ஒடிஸாவில் அடுத்த 2 வாரங்களில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 9 முக்கிய அறிவிப்புகள்!

கரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். விரிவான செய்திக்கு..

கூடுதலாக 5 கிலோ அரிசி; 1 கிலோ பருப்பு வழங்கப்படும்: அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். விரிவான செய்திக்கு..

மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,041 ஆக உயர்வு

பாகிஸ்தானில் வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,041 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 8 ஆகவும் உயர்ந்துள்ளது.விரிவான செய்திக்கு..

கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது; எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டும் போதாது என்று உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு..

தில்லியில் மளிகைக் கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி

புது தில்லி: புது தில்லியில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை 24 மணி நேரமும் திறந்து வைக்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார்.

 ஏப்ரல் முதல் வாரத்தில் கிசான் யோஜ்னா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2000 செலுத்தப்படும். இதன் மூலம் 8.69 கோடி விவசாயிகள் பலனடைவார்கள்.

ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு 3 மாதங்களுக்கு தலா ரூ.500 செலுத்தப்படும்.  இதன் மூலம் சுமார் 20 கோடி பெண்கள் பலனடைவார்கள்.

 கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உடனடியாக ரூ.2000ம் வழங்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

நாடு முழுவதும் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு செய்யப்படும்.

முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

 கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

உஜ்வாலா திட்டத்தில் 3 மாதத்துக்கு இலவச சிலிண்டர்

 உஜ்வாலா திட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும்.

மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் நிர்மலா சீதாராமன்

புது தில்லி: இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் 1 மணியளவில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கவிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com