அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்..
அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

கரோனா நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் உலகம் முதல் உள்ளூர் வரை - உடனுக்குடன்.. லைவ் அப்டேட்ஸ்!

செங்கல்பட்டில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்தைக் கடந்தது

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி இன்று மேலும் 291 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா: அமெரிக்காவில் அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு; பிரேசிலை விஞ்சியது!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இன்று பதிவானது அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். நேற்று 52,000 பேர் பாதிக்கப்பட்டிருந்ததே இதுவரை அதிகபட்ச ஒருநாள் பாதிப்பாக இருந்து வந்தது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் மேலும் 211 பேருக்கு கரோனா; பாதிப்பு 4,964 ஆக உயர்வு!

கேரளத்தில் மேலும் 211 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,964 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

பாகிஸ்தானில் புதிதாக 4,087 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 78 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,087 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,21,896 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 2,082 பேர்: மாவட்டவாரியாக கரோனா பாதிப்பு நிலவரம்

 சென்னையில் அதிகபட்சமாக இன்று 2,082 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 64,689 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் புதிதாக 4,329 பேருக்கு கரோனா; மேலும் 64 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 4,329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

மேற்குவங்க பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜிக்கு கரோனா

 மேற்குவங்க பாஜக எம்.பி. லாக்கெட் சட்டர்ஜிக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.10 கோடியானது

வாஷிங்டன்: உலகளவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1.10 கோடியாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் பலி எண்ணிக்கையும் 5,24,743176 ஆக உயர்ந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
உலகில் 213 நாடுகளுக்கு மேல் தொற்று பரவி மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால் பாதிப்பும் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  
 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 15 ஆயிரத்து 218-ஆக அதிகரித்துள்ளது. 

ஜூலை 31 வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், ஜூலை 31 ஆம் தேதி வரை  சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா பாதிப்பு

 திருப்பதி கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கோயுல் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 அறிகுறி இல்லாமல், கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் லேசான அறிகுறி இருப்பவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைப்பதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பெங்களூருவில் 9 மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க மறுப்பு; ஆம்புலன்ஸிலேயே மரணித்த நபர்

 43 வயது நபர் நெஞ்சு வலி மற்றும் இருமலுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நிலையில், 9 மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில், ஆம்புலன்ஸிலேயே மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கொல்கத்தா: கரோனா பாதித்தவரின் உடலை ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த உறவினர்கள்

 
கொல்கத்தாவில் மருத்துவரின் சான்றிதழ் கிடைக்காததால், கரோனா பாதித்து உயிரிழந்த 71 வயது முதியவரின் உடலை குடும்பத்தினர் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். விரிவான செய்திக்கு..

50 வயதுக்குட்பட்ட, அறிகுறி இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டில் இருக்கலாம்: கர்நாடக அரசு

 கரோனா பாதித்து அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி உடையவர்களும், 50 வயதுக்கு உட்பட்டவர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

ஜூலை மாதத்துக்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் ஜூலை மாதத்திற்கும் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விரிவான செய்திக்கு..

ரஷியாவில் மேலும் 6,718 பேருக்கு தொற்று; பலி 10 ஆயிரத்தை நெருங்குகிறது!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,718 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,67,883 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

மகாராஷ்டிரத்தில் 6 ஆயிரத்தைத் தாண்டியது இன்றைய கரோனா பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,330 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 2,373 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,373 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

கேரளத்தில் 160, கர்நாடகத்தில் 1,502 பேருக்கு கரோனா உறுதி

கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 160 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 1,502 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

சென்னையில் 2,027, பிற மாவட்டங்களில் 2,316 பேருக்கு கரோனா: மாவட்டவாரியாக விவரம்

​தமிழகத்தில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 2,316 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

தமிழகத்தில் முதன்முறையாக 4 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

60 சதவிகிதத்தை நெருங்கும் குணமடைவோர் விகிதம்: மத்திய அரசு

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 59.52% ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கி: தொடக்கி வைத்தார் கேஜரிவால் 

 தில்லியில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில், நாட்டில் முதல் முறையாக தில்லியில் பிளாஸ்மா வங்கியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இன்று தொடக்கி வைத்தார். விரிவான செய்திக்கு..

ஐந்து நாள்களில் நாட்டில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

 இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை எட்டி வெறும் 5 நாள்களில், கரோனா பாதிப்பு ஆறு லட்சத்தைத் தொட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி  அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரிவான செய்திக்கு..

 

ரஷியாவில் ஒரேநாளில் 6,760 பேருக்கு கரோனா; பாதிப்பு 6,61,165 ஆக உயர்வு!

 ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,760 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 6,61,165 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 6 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 6,04,641 ஆக உயர்ந்துள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 19,148 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 434 பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனா பாதிப்பு 6,04,641 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,26,947 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,59,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 17,834  ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை 90.56 லட்சம் கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

நாட்டில் இதுவரை 90.56 லட்சம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,29,588 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் 90,56,173 க்கும் அதிகமான கரோனா தொற்று சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,29,588 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  பரிசோதிக்கப்பட்டன.
சோதனைத் திறனை அதிகரிக்கும் முயற்சியாக, அரசு பொது ஆய்வகங்கள் (730) மற்றும் தனியார் ஆய்வகங்கள் (270) என மொத்தம் 1,000 கரோனா சோதனை ஆய்வகங்களுக்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ஆர்டி-பிசிஆர் ஆய்வகங்கள் (557); ட்ரூநாட் ஆய்வகங்கள் (363) மற்றும் சிபிஎன்ஏடி ஆய்வகங்கள் (80) ஆகும். 

அமெரிக்காவில் திடீரென உயர்ந்த பலி எண்ணிக்கை; ஒரேநாளில் 1,199 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,199 பேர் பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கரோனா பாதிப்பு: சென்னையில் 888 போ் உயிரிழப்பு

 சென்னையில் செவ்வாய்க்கிழமை 2,393 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 58,327 ஆக உயா்ந்துள்ளது. அதேவேளை இறப்பு எண்ணிக்கை 888-ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,653 பேருக்கு கரோனா தொற்று; 504 பேர் பலி

 இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 18,653 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பு 5,85,493 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..

கரோனா: உலக செய்திகள்...

 சிங்கப்பூரில் மேலும் 246 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். விரிவான செய்திக்கு..

தில்லியில் புதிதாக 2,442 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 2,442 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கர்நாடகத்தில் புதிதாக 1,272 பேருக்கு கரோனா

கர்நாடகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,272 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

கேரளத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

சென்னையில் 2,182 பேருக்கு தொற்று; பிறமாவட்டங்களில் 1,700 பேர்: மாவட்டவாரியாக நிலவரம்

சென்னையில் புதிதாக 2,182 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..

 

தமிழகத்தில் புதிதாக 3,882 பேருக்கு கரோனா; மேலும் 63 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,882 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 94,049 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

ஊழியருக்கு கரோனா உறுதி: வங்கியின் இரு கிளைகள் மூடல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று, உறுதியானதையடுத்து, அந்த வங்கியின் 2 கிளைகளும், புதன்கிழமை மூடப்பட்டது. விரிவான செய்திக்கு..

 

கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க கரோனா பரிசோதனை கட்டாயமல்ல: நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்

 கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா பரிசோதனை செய்திருப்பது கட்டாயமல்ல என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..

புதுச்சேரியில் மேலும் 30 பேருக்கு கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 739-ஆக அதிகரிப்பு

புதுவையில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 739 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com