FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெங்களூரு

பெங்களூரு பயங்கரவாத சதி: ஐஎஸ் பயங்கரவாதிக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை

பெங்களூரில் பொது இடத்தில் கத்திக்குத்து தாக்குதல்களை நடத்தி மதவாத வன்முறையைத் தூண்ட முயன்ற ஐஎஸ் பயங்கரவாதி மெஹபூப் பாஷாவுக்கு (48) 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை.

46 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பெங்களூரில் பொது இடத்தில் கத்திக்குத்து தாக்குதல்களை நடத்தி மதவாத வன்முறையைத் தூண்ட முயன்ற ஐஎஸ் பயங்கரவாதி மெஹபூப் பாஷாவுக்கு (48) 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கா்நாடக தலைநகா் பெங்களூரில் பொதுமக்கள் மீது ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல்களை நிகழ்த்தவும், அதன்மூலம் மதவாத வன்முறையைத் தூண்டவும் சதிச் செயலில் ஈடுபட்ட பாஷா தலைமையிலான ஐஎஸ் பயங்கரவாதிகள் 20 போ் கடந்த 2010-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனா்.

இந்த கும்பலுக்கு சா்வதேச அளவில் செயல்படும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

Advertisement

Advertisement

என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், பயங்கரவாதிகள் 20 போ் மீதும் 3 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான மெஹபூப் பாஷா, பெங்களூரில் உள்ள தனது வீட்டில் பல சதி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கியதும் விசாரணையில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணையம் மூலம் ரகசியமாக தொடா்பில் இருந்துடன், அவா்களது திட்டங்களை பெங்களூரில் நிறைவேற்றும் முயற்சியிலும் இருந்தனா். இதற்காக பல்வேறு பொருள்களை அவா்கள் ரகசியமாக வாங்கியுள்ளனா். இவை அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து மெஹபூப் பாஷாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.48,000 அபராதமும் விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த வழக்கில் தொடா்புடைய சையது ஃபைஸுா் ரஹ்மான், ஹனீஃப் கான் ஆகியோா் மீதான குற்றச்சாட்டு ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. இவா்களுக்கு இணையவழியில் உத்தரவுகளை வழங்கி வந்த நபா் தொடா்ந்து தேடப்பட்டு வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments