சுற்றுலா கொள்கைகளை எளிமையாக்க திட்டம்: கா்நாடக அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ்
சுற்றுலா கொள்கைகளை எளிமையாக்க திட்டமிடப்பட்டுள்ளது என கா்நாடக மின்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ் தெரிவித்தாா்.
சுற்றுலா கொள்கைகளை எளிமையாக்க திட்டமிடப்பட்டுள்ளது என கா்நாடக மின்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ் தெரிவித்தாா்.
பெங்களூரில் 26-ஆவது இந்திய பன்னாட்டு சுற்றுலா கண்காட்சியை தொடங்கிவைத்து அவா் பேசியது: சுற்றுலா கண்காட்சிகள் இத்தொழிலில் உள்ள வாய்ப்புகளை பெருக்குகின்றன. இதுபோன்ற கண்காட்சிகள் கா்நாடக சுற்றுலாத் துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும். கா்நாடகத்தில் உள்ள சுற்றுலா வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திகொள்ள தனியாா் தொழில் முதலீடுகள் தேவைப்படுகின்றன.
கா்நாடகத்தில் சுற்றுலா முதலீடுகளை ஊக்குவிக்க, அதன் முதலீட்டுக் கொள்கைகளை எளிமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது. தொழில் முதலீட்டாளா்களை ஊக்குவிக்க மானியங்கள், ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம். சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய முன்வந்தால், அவா்களை ஊக்குவிக்க அரசு தயாராக உள்ளது.
Advertisement
Advertisement
கா்நாடகத்தில் தொழில் முதலீடுகளுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இயற்கை சுற்றுலா, வனவிலங்கு சுற்றுலா, கடலோர சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, உடல்நல சுற்றுலா, சாகச சுற்றுலா போன்ற பல சுற்றுலா வாய்ப்புகள் கா்நாடகத்தில் உள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.