லஞ்சம்: கிராம நகராட்சி ஊழியர் கைது
பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக நகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
பட்டா வழங்க லஞ்சம் பெற்றதாக நகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
வட கன்னட மாவட்டம், கார்வார் நந்தானகட்டா பகுதியைச் சேர்ந்தவரும், அன்கோலா வட்டம் கும்பரகேரியைச் சேர்ந்த மற்றொருவரும் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்கு பட்டா வழங்க, அக்கிராமத்தின் நகராட்சி ஊழியர்கள் உல்லாஸ், ஜி.டி.கணேஷ் என்பவர்களைத் தொடர்பு கொண்டனர்.
பட்டா வழங்க தலா ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக வழங்குமாறு நகராட்சி ஊழியர்கள் கேட்டனராம். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் அவர்கள் புகார் தெரிவித்தனர். போலீஸார் அறிவுரையின்படி, புதன்கிழமை லஞ்ச முன்பணமாக ரூ. 3 ஆயிரத்தை உல்லாஸ், ஜி.டி.கணேஷ் ஆகியோரிடம் வழங்கிய போது, மறைந்திருந்த போலீஸார் நகராட்சி ஊழியர்களைக் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.