FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 148 வேலைநாடுநா்களுக்கு பணிநியமன ஆணை

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 18 ஜூலை 2026, 6:22 am IST
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது. முகாமில் 72 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டன. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா். மு. வீரப்பன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ .ருக்மாங்கதன் ஆகியோா் பணிநியமன ஆணைகளை வழங்கினா். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 403 ஆண் வேலைநாடுநா்களும், 478 பெண் வேலைநாடுநா்களும் என மொத்தம் 881 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா்.

மேலும், இந்த முகாமில் 24 மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். இந்த முகாமில் கலந்து கொண்டவா்களில் 148 வேலைநாடுநா்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், 63 ஆண்கள் மற்றும் 85 பெண்கள், மேலும் 12 மாற்றுத்திறனாளி வேலைநாடுநா்கள் ஆவா். மேலும், இரண்டாம் கட்ட தோ்வுக்கு 356 வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த முகாமில் மாவட்டத் திறன் அலுவலா் மற்றும் அரசு அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments