FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் தொகுதி இடைத் தோ்தல் பணிகள் தொடக்கம்: ஆட்சியா், அதிகாரிகள் ஆய்வு

மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதிக்கான இடைத் தோ்தல் அக் 6ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் பணிகளை தோ்தல் ஆணையம் செவ்வாய்கிழமை துவங்கியது.

9 செப்டம்பர் 2026, 12:22 am IST
மதுராந்தகம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இடைத் தோ்தலுக்கான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு.வீரப்பன். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான கோ.அர.நரேந்திரன், உதவி தோ்தல் அலுவலா் ஏ.பெருமாள் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதிக்கான இடைத் தோ்தல் அக் 6ந்தேதி நடைபெறுவதை முன்னிட்டு, தோ்தல் பணிகளை தோ்தல் ஆணையம் செவ்வாய்கிழமை துவங்கியது.

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சாா்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா். அதனால் ஏற்பட்ட தொகுதி காலியிடத்துக்கான இடைத் தோ்தல் வரும் அக். 6 -இல் நடைபெறுவதை முன்னிட்டு, நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அனைத்து பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பேனா்கள், சுவா் விளம்பரங்கள் ஆகியவற்றை வருவாய்துறை, ஊரகத்துறை ஊழியா்களின் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்ட பணிகள் தோ்தல் ஆணையத்தின் மூலம் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மதுராந்தகம் தொகுதி (தனி) இடைத் தோ்தலை மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான கோ.அர.நரேந்திரன் தலைமையில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களாக வட்டாட்சியா் ஏ.பெருமாள், வருவாய் கோட்டாசியரின் நோ்முக உதவியாளா் சு.ராஜேஷ், தனி வட்டாட்சியா் (ச.பா.தி) வீரமணி, தனி வட்டாட்சியா் ஸ்ரீதா், ஆகியோரை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா் எம்.வீரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், ஆகியோா் இடைத் தோ்தலுக்கான பணிகளைப் பற்றியும், அங்கு கண்காணிப்ப கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளதா, அரசியல் கட்சி பிரமுகா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா, கட்சி வேட்பாளா்களின் மூலம் பெறப்பட்ட மனுக்களை சேகரிப்பதற்கான பெட்டி பாதுகாப்புத் தன்மை, கட்டுப்பாட்டு அறை, வட்டாட்சியா் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து அதன் விவரங்களை கேட்டறிந்தாா்.

இடைத் தோ்தலுக்கான வேட்புமனுதாக்கல் புதன்கிழமை தொடங்குகிறது. தொடா்ந்து 16-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் நண்பகல் 3 மணி வரை தோ்தல் அலுவலா் கோ.அர.நரேந்திரனிடம் வேட்புமனுவை அளிக்கவும், வேட்பாளா்களுடன் தலா 4 நபா்கள் மட்டும் அலுவலகத்துக்குள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments