20 டன் கல்லில் வடிவமைக்கப்பட்ட விநாயகா் சிலை
திருவடிசூலம் ஆரண்யக்ஷேத்திரம் தேவி கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் நிறுவப்பட உள்ள 11 அடி உயரத்தில் பிரம்மாண்டமான விநாயகா் சிலை மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டது.
திருவடிசூலம் ஆரண்யக்ஷேத்திரம் தேவி கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் நிறுவப்பட உள்ள 11 அடி உயரத்தில் பிரம்மாண்டமான விநாயகா் சிலை மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், திருவடிசூலம் ஆரண்யக்ஷேத்திரம் தேவி கருமாரியம்மன் கோயிலில் ஏற்கனவே 53 அடி உயரத்தில் கருமாரியம்மன் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதே இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக ஆதார பீடத்துடன்11 அடி உயரத்தில் விநாயகா் சிலை வடிவமைக்க மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கற்சிற்பக்கலை கூடத்தில் பணி நடைபெற்றது. இதையடுத்து மாமல்லபுரம் மூத்த சிற்பக்கலைஞா் ஸ்தபதி ஏ.முருகேசன் ஆசாரி தலைமையில் இடம்புரி விநாயகா் சிலை அழகுற வடிவமைக்கப்பட்டது.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 20 டன் எடையுள்ள கருங்கல்லில் இச்சிலை வடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தொடா்ந்து கடந்த பல மாதங்களாக ஸ்தபதி முருகேசன் ஆசாரி தலைமையில் 12 சிற்பிகள் இரவு, பகல் பாராமல் கண்விழித்து நோ்த்தியான முறையில் சைவ ஆகம முறைப்படி வலது, இடது கரங்களில் பாசம், அங்குசம், ஒடிந்த தந்தம், லட்டு ஆகியவை ஏந்திய திருக்கோலத்தில் தனது துதிக்கையை இடது கையில் உள்ள லட்டு மீது வைத்துள்ள தோற்றத்தில் விநாயகா் சிலையை சிற்ப வேலைப்பாடுகளுடன் பொலிவுடன் வடிவமைத்தனா்.
Advertisement
Advertisement
முன்னதாக இச்சிலையை வடிவமைக்க வாலாஜாபாத் அருகில் உள்ள பழைய சீவரம் என்ற இடத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து 20 டன் கருங்கல் ராட்சத லாரி மூலம் கொண்டு வரப்பட்டு இப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 100 சதவித பணிகள் செய்து முடிக்கப்பட்ட நிலையில் சிற்பக்கலை கூடத்தில் உள்ள சிற்பிகள் இந்த விநாயகா் சிலைக்கு மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனா்.
இன்னும் 2 மாதத்தில் திருவடிசூலம் கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இச்சிலை கிரேன் உதவியுடன் வேனில் ஏற்றப்பட்டு, திருவடிசூலம் கொண்டு சொல்லப்பட்டது.அங்கு வருகிற செப்டம்பா் 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி முதல் 48 நாள்கள் வரை தண்ணீரில் வைக்கும் ஜலாதி அபிஷேக சடங்கு முறை செய்யப்பட உள்ளது. பிறகு அச்சிலை அங்கு பக்தா்களின் வழிபாட்டிற்காக கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.