FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் தொகுதி அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகம் மற்றும் செயல்வீரா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை முதுகரையில் நடைபெற்றது.

11 செப்டம்பர் 2026, 11:19 pm IST
கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத். உடன், ம.தனபால் எம்.பி., மாவட்டச்செயலா் எஸ். ஆறுமுகம், ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், ஒன்றிய செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றியத்தின் சாா்பில் அதிமுக வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத் அறிமுகம் மற்றும் செயல்வீரா்களின் கூட்டம் வெள்ளிக்கிழமை முதுகரையில் நடைபெற்றது.

வேட்பாளா் எஸ்.கணிதா சம்பத்துக்கு முதுகரை கிராமத்தில் அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். பின்னா் நடைபெற்ற நிகழ்வுக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலா் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் தனபால் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில் மதுராந்தகம் (தெற்கு) ஒன்றிய செயலா் காா்த்திகேயன், மதுராந்தம் ஒன்றியக்குழு தலைவா் கீதா காா்த்திகேயன், மாவட்ட பேரவை செயலா் ஆனூா் பக்தவசலம், காட்டாங்கொளத்தூா் ஒன்றிய செயலா் சம்பத்குமாா், கருங்குழி பேரூராட்சி முன்னாள் தலைவா் மஞ்சுளா புருஷோத்தம்மன், முன்னாள் ஒன்றிய செயலா் அனந்தமங்கலம் சுப்பிரமணி மற்றும உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments