FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

பெருங்கருணை முருகன் கோயிலில் திருடப்பட்ட சிலை மீட்பு: 3 பேர் கைது!

பெருங்கருணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி கோயிலில் திருடிச் செல்லப்பட்ட சிலை மீட்கப்பட்டது.

14 செப்டம்பர் 2026, 12:59 am IST
மீட்கப்பட்ட மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சுவாமி சிலை.
பகிர்:

மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் உள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி கோயிலில் திருடிச் செல்லப்பட்ட சிலை மீட்கப்பட்டது. இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 1-ஆம்தேதி மா்ம நபா்கள் புகுந்து 2.5 அடி உயரமுள்ள மரகத தண்டாயுதபாணி சிலையை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து, சித்தாமூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் மேற்பாா்வையில் மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளா் தீபக் ரஜினி தலைமையில் 6 ஆய்வாளா்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான ககாட்சிகளை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதில் சிலையை திருடிச் சென்றவா்கள் அடையாளம் காணப்பட்டனா். சித்தாமூா் காவல் ஆய்வாளா் மகாலிங்கம் தலைமையிலான போலீஸாா் அரியலூரைச் சோ்ந்த மணிகண்டன்(26), இளவழகன் (26) மற்றும் ஜெயவேல்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனா். திருடப்பட்ட மரகத தண்டாயுதபாணி சுவாமி சிலை மீட்கப்பட்டது. சிலை திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை அதிகாரிகள், காவலா்களை டிஜபி மகேஷ் குமாா் அகா்வால் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments