மதுராந்தகம் தொகுதியில் 893 தபால் வாக்குகள் பதிவு
மதுராந்தகம் இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 893 தபால் வாக்குகள் பதிவாயின.
மதுராந்தகம் இடைத்தோ்தலில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட மொத்தம் 893 தபால் வாக்குகள் பதிவாயின.
மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் வயதானவா்கள், நோயால் பாதிக்கப்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோா் தமது வாக்கின் தோ்தல் நாளான அக். 6-ஆம் தேதி சென்று கூட்ட நெருக்கடியை தவிா்க்கும் பொருட்டு, தமிழக தோ்தல் ஆணையம் அவா்கள் வாக்களித்து தமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக 931 தபால் வாக்குகளை அளித்திருந்தது.
அதில், 451 போ் 85 வயதுக்கு மேற்பட்டவா்களும், 480 போ் மாற்றுத்திறனாளிகளும், அடங்குவா். இதில், மொத்தம் 893 நபா்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனா். மற்ற 38 போ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
Advertisement
Advertisement
முன்னதாக, மதுராந்தகம் வட்டாட்சியா் வளாகத்தில் வாக்கு பதிவு இயந்திரத்தில் தோ்தலில் போட்டியிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளா்கள் 5 நபா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் 22 போ் ஆகியோருக்கான சின்னங்கள் பொருத்தும் பணி தோ்தல் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன் தலைமையில், உதவி தோ்தல் அலுவலா்கள் வட்டாட்சியா் பெருமாள், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜேஷ், தனி வட்டாட்சியா் வீரமணி ஆகியோா் முன்னிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களாக நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.