பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
திருவொற்றியூரில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவொற்றியூரில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருவொற்றியூர் சிவப்பிரகாசம் நகரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி, மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர். மனைவி சுகந்தி, மகன் ரோஹித் (16), குரோம்பேட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்.
கல்லூரியின் பருவத் தேர்வுகளில் ரோஹித் குறைந்த மதிப்பெண்களை எடுத்தாராம். இதனால் ரோஹித்தின் பெற்றோரைக் கல்லூரிக்கு அழைத்து அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த ரோஹித் கதவை தாளிட்டுக் கொண்டு அறையில் இருந்துள்ளார்.
வெகுநேரம் கடந்தும் ரோஹித் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். கதவு திறக்கப்படாததால் அதை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரோஹித் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
திருவொற்றியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.