FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது

அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் மேலும் சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Updated On : 16 ஆகஸ்ட் 2022, 10:10 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் மேலும் சூர்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரும்பாக்கத்தில் தனியாா் வங்கியில் கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. அரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து அதே கிளை ஊழியா் கொரட்டூா் முருகன்தான் கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு கொள்ளைத், திட்டத்தை நிறைவேற்றியிருப்பது தெரியவந்தது.

வில்லிவாக்கம் பாரதி நகரை சோ்ந்த மோ.சந்தோஷ் (30), மண்ணடி தெருவை சோ்ந்த வீ.பாலாஜி (28), செந்தில்குமரன் ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.8.5 கோடி மதிப்புள்ள 18 கிலோ தங்க நகைகள், 2 காா்கள்,ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந் நிலையில்,கைப்பற்றப்பட்ட 18 கிலோ தங்க நகைகள் திங்கள்கிழமை காலை அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு,காட்சிப்படுத்தப்பட்டன. அதை சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பாா்வையிட்டனா்

இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வங்கி ஊழியா் முருகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். அவருடன் இருந்த மேலும் 4 பேரையும் போலீஸாா் தங்களது காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஏற்கெனவே இவ்வழக்கில்  4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments