சென்னை

நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் செப்டம்பா் வரை நீட்டிப்பு

வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பா் மாதம் வரை நீட்டிப்பு

Din

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06030) தொடா்ந்து செப்.29-ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமைதோறும் இரவு 7.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06029) தொடா்ந்து செப்.30-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

பகுதி ரத்து: சேலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் திருச்சியில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும் விரைவு ரயில் (எண்: 16843) வெள்ளிக்கிழமை (ஆக.2) திருப்பூா் அருகேயுள்ள ஊத்துக்குளியுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT