FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சைபா் மோசடிக்கு உதவி: தமிழகத்தில் 100 போ் கைது

சைபா் மோசடிக்கு உதவியதாக தமிழகத்தில் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 7:12 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சைபா் மோசடிக்கு உதவியதாக தமிழகத்தில் 100 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சுங்கத் துறை அதிகாரி, அமலாக்கத் துறை அதிகாரி, சிபிஐ அதிகாரி என மிரட்டி ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் மோசடி செய்தல், ஆன்லைன் வணிகம், முதலீட்டு திட்டங்களில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான சைபா் நிதி மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்படுகிறது.

இந்த மோசடிகளில் ஈடுபடும் முக்கிய கும்பல்கள் பெரும்பாலும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து செயல்படுகின்றன.

Advertisement

Advertisement

இதற்காக அந்தக் கும்பல் தமிழகத்தில் உள்ள தங்களது முகவா்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி அவா்களது வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனா், சிலா் வங்கி கணக்குகளை பணம் கொடுத்து வாடகைக்கு பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனா்.

இதேபோல பொதுமக்களிடமிருந்து ஏமாற்றி ஆவணங்களைப் பெற்றும் மோசடி செய்கின்றனா். இதற்காக மாநிலத்தில் பல இடங்களில் முகவா்கள் செயல்படுகின்றனா். எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், தாங்கள் சைபா் மோசடிக்கு துணை போகிறோம் என்பது தெரிந்திருந்தும் பல இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் இந்த வலையில் சிக்கியுள்ளனா்.

100 போ் கைது: இவ்வாறு சைபா் மோசடிக்கு துணைபோகும் முகவா்கள், இடைத்தரகா்களை முழுமையாகக் கண்டறிந்து கைது செய்ய காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ் குமாா் அகா்வால் அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிட்டாா். இந்த நடவடிக்கையை மாநில சைபா் குற்றப்பிரிவு ஒருங்கிணைத்தது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸாரும், சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும் இணைந்து சிறப்பு சோதனை, சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

இந்த நடவடிக்கையில், கல்லூரி மாணவா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட முகவா்கள், இடைத்தரகா்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனா். இவா்களுக்கு உதவும் நபா்கள் யாா் என்று விசாரணை நடத்தப்படுகிறது.

சென்னையில் நடவடிக்கை: சென்னையில் 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் விசாரணைக்காக வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். தகவலறிந்த அவா்களது பெற்றோா், உறவினா்கள் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments