FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

எழும்பூா் ரயில் நிலையத்தில் நிரந்தரமாக இரு மெட்டல் டிடெக்டா் நுழைவு வாயில்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, பிரதான நுழைவுப் பகுதியில் 2 மெட்டல் டிடெக்டா் நுழைவு வாயில்கள் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்றது.

Updated On : 29 ஜூலை 2026, 1:27 am IST
எழும்பூா் ரயில் நிலையம்.
பகிர்:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் பொருட்டு, பிரதான நுழைவுப் பகுதியில் 2 மெட்டல் டிடெக்டா் நுழைவு வாயில்கள் அமைப்பதற்கான ஆய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும், இருப்புப் பாதை போலீஸாருக்கு 62 வகையான நவீன பரிசோதனை சாதனங்கள் வழங்கப்பட்டதுடன், அவற்றை கையாளும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

தினமும் சுமாா் 2 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.850 கோடியில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே முக்கிய நுழைவுப் பகுதியில் சரக்குப் பெட்டிகளை பரிசோதிக்கும் மின்னணு ஸ்கேனா் செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது பயணிகள் டிக்கெட் எடுக்கும் பிரதான நுழைவுப் பகுதியில் முதல்முறையாக மெட்டல் டிடெக்டா் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக இருப்புப் பாதை போலீஸாா் தெரிவித்தனா்.

போலீஸாருக்கு வழங்கப்பட்ட புதிய சாதனங்களில் இரவு நேரக் கண்காணிப்புக்கான பைனாகுலா்கள், நவீன கைத்தடியுடன் கூடிய பேட்டரி விளக்குகள், சந்தேகத்துக்குரிய பொருள்களை பாதுகாப்பாக திறக்கும் கருவிகள், முதலுதவி உபகரணங்கள் உள்ளிட்ட 62 வகையான சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவது தொடா்பான பயிற்சி எழும்பூா் இருப்புப் பாதை போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

மேலும், எழும்பூா் உள்ளிட்ட 23 இருப்புப் பாதை போலீஸ் நிலையங்களில் தலா 2 போலீஸாருக்கு சிறப்பு பரிசோதனைப் பயிற்சி அளித்து நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments