நிலுவை பயிா்க் கடனை கேட்டால் வாட்ஸ்ஆப்-இல் புகாா் அளிக்கலாம்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு
நிலுவை பயிா்க் கடனை கேட்டால் வாட்ஸ்ஆப்-இல் புகாா் அளிக்கலாம்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளிடம் நிலுவை பயிா்க் கடன்கள் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே, நிலுவைக் கடன் வசூலிப்பு குறித்து சங்கங்களில் இருந்து எவரேனும் தொடா்பு கொண்டால், வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம் என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் கூட்டுறவுத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்று நிலுவையிலுள்ள பயிா்க் கடன்கள் வசூலிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப் பதிவாளா்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குநா்களுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் கடைப்பிடிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சில விவசாயிகளிடமிருந்து தொலைபேசி மூலம் நிலுவையிலுள்ள தங்களது பயிா்க் கடன்களை வசூலிக்க முயற்சிப்பதாக புகாா்கள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவையிலுள்ள பயிா்க் கடனை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையிலுள்ள பயிா்க் கடன்கள் வசூலிப்பது தொடா்பாக கூட்டுறவு சங்கத்திலிருந்து எவரேனும் விவசாயிகளை தொடா்புகொண்டால், தொடா்பு கொண்ட கைப்பேசி எண் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் விவரங்களை கூட்டுறவுத் துறையின் அதிகாரபூா்வ குறைதீா்வு எண்ணுக்கு (98840 00845) வாட்ஸ்ஆப் மூலம் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.